.

Pages

Tuesday, September 24, 2013

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாம் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 22/09/2013 ஞாயிறு அன்று காலை 10..00 மணியளவில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் சிறப்புடன் நடை பெற்றது.

இவ்விழாவிற்கு கா.மு.கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜனாப் ஏ.எம்.உதுமான் முகைதீன் அவர்கள் தலைமை ஏற்று விழாவை துவக்கி வைத்தார்.

வரவேற்ப்புரையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி ஏ.மகபூப் அலி அவர்கள் ஏற்க மாவட்ட கல்வி அலுவலர் திரு சி.நரேந்திரன் முகாமை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.நன்றியுரையை என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் மற்றும் முகாம் அமைப்பாளருமாகிய திரு.எஸ்.நாகராஜன் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவிற்கு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.