.

Pages

Saturday, September 21, 2013

கண்படுமே பிறர் கண்படுமே.

பிறர் கண் படுதோ இல்லையோ, நம் கண் கெடாமல் பார்த்துக்கொள்வது நம் கடமை.

நம் எல்லோருக்கும் தெரியும் வலிகளில் ஒன்று தலைவலி. தலைவலி வந்துவிட்டால் போதும் அப்புறம் என்ன பறக்க பறக்க சில வலி நிவாரணிகளை எடுத்து நெற்றியை சுற்றி தடவுவோம். அந்த வலி நிவாரணிகளில் ஒன்றுதான் கோடாலி தைலம் என்று சொல்லக்கூடிய திரவ நிலையில் உள்ள ஒருவகையான தெளிவான தைலம். பக்கத்து வீட்டில் இந்த தைல பாட்டிலை திறந்தால் மற்ற வீடுகளுக்கும் இதன் வீரியம் பரவும், அவ்வளவு வீரியம் கொண்ட தைலம்தான் இந்த கோடாலி தைலம்.

இந்த தைலம் மூட்டு வலி, தசை பிடிப்பு, தசை வலி, கால் கடுப்பு போன்ற வலிகளுக்கு ஏற்ற மருந்து. அதே சமயம் தலை வலிக்கு ஏற்ற மருந்தாக இருந்தாலும் இதை நெற்றியில் தடவும் போது கடுமையான பாதிப்பை அடைவது கண்கள். இந்த தைலத்தில் கலந்து இருக்கும் மருத்துவ வீரியம் கண்களை பாதித்து நாளடைவில் கிட்டப்பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணிவிடுவதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆகவே, இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

8 comments:

  1. என்ன காக்கா ரொம்ப லேட்டா தகவலே சொல்லிபுட்டியே நான் இத தானே பெரும்பாலான நேரங்களில் யூஸ் பண்றேன் இனிமே பாதுகாப்பாக ஈக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இப்பவே மூக்கு கண்ணாடி போட ஆரம்பிச்சாச்சு, அப்புறம் என்ன, கோடலியை எடுத்து மரத்தை வேட்டவேண்டியதுதான்.

      Delete
  2. அட நம்ம கோடாலி :)

    இதுலே டூப்ளிகேட்டும் வந்துட்டுது. எதுக்கும் எச்சரிக்கையா இருப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை.

      Delete
  3. அருமையான தகவல் பதிவுக்கு நன்றி. iam comeback dubai

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஊர் வரும்போது எனக்கு ஒரு பாட்டில் வாங்கி வாருங்கள்.

      Delete
  4. தைலம் தேச்சி எனக்கு பழக்கமில்லை.அதனால் நான் தப்பிச்சேனுங்கோ !

    ReplyDelete
    Replies
    1. ஓ! அப்படியா?
      அப்போ துபாய்லே ஒரு பாட்டில் மிச்சம் என்று சொல்லுங்கோ.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.