இந்த நிலத்தில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் திடீரென்று திரண்டு வந்து குடிசைகளைப்போட்டு குடியமர்ந்து விட்டனர். நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட குடிசைகள் காணப்பட்ட இடத்தில் இன்று 70 க்கும் மேற்பட்ட குடிசைகள் காணப்பட்டன.
இதைத்தொடர்ந்து R.D.O.முருகேசன், தாசில்தார் முத்துக்குமரன் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் குடிசைகளை அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
அப்போது அங்கு நின்ற மக்கள் ஒன்று திரண்டு குடிசைகளை அகற்றுவதை தடுத்து நிறுத்தினர். பிறகு R.D.O., தாசில்தார், இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது ஆவேசப்பட்ட வீரம்மாள், மும்தாஜ் ஆகிய இரு பெண்கள் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். அருகில் நின்ற காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அருகில் நின்ற மக்கள் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆகியோரை சூழ்ந்து கொண்டு குடியிருக்க வீட்டு மனைகள் வழங்க வலியுறுத்தினார்கள். நிலைமை தொடர்ந்து மோசமாகிக்கொண்டு இருந்ததால் பாதுகாப்புக் கருதி மேலும் இரண்டு வாகனங்களில் காவல் படையினர் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று காலை முதல் இப்பகுதி முழுதும் பதற்றமாக காணப்பட்டன.
ஆக்கிரமிப்பாளர்களால் இந்த பகுதிக்கு அம்மா நகர் என்று பெயர் வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாவம் விவசாயிகள் பாடு.
ReplyDelete