.

Pages

Thursday, September 19, 2013

தெருநாய்கள் குறித்த அதிரை நியூஸின் செய்திக்கு பேரூராட்சித்தலைவர் மறுப்பு [ காணொளி ]

''அதிரை பூராவும் ஒரே நாய்த் தொல்லை.. என்னமாச்சும் பண்ணுங்கப்பா.. மக்கள் புலம்பல் !!'' என்ற தலைப்பில் கடந்த 14-09-2013 அன்று அதிரையில் உலாவும் நாய்களைப்பற்றி தளத்தில் படத்துடன் செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதில் பேரூராட்சியின் நடவடிக்கை தேவை என்ற வேண்டுகோளையும் அதில் நாம் முன்வைத்திருந்தோம்.

அனைவரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்திய இந்த செய்தி அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்களிடமும் போய் சேர்ந்து இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து நம்மிடம்... நாய் தொடர்பாக பேரூராட்சியின் நடவடிக்கை குறித்து எங்களின் கருத்தையும் பெற்று வெளியிட்டிருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் தெரியப்படுத்திவிட்டு கடந்த காலங்களில் பேரூராட்சியின் சார்பாக அதிரை தெருக்களில் உலா வந்த நாய்கள் தொடர்பாக என்னனென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன ? என்பது குறித்து நம்மிடம் பட்டியலிட்டார்.

8 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    நம்ம தெருவில் உள்ள பார்பதற்கு நாயை போன்றே உள்ள கடித்தால் ரத்தம் வர கூடிய குட்டி போடக்கூடிய நாய்கள் நிறைய இருகின்றது. அதற்கு ஊசி போட்டீர்களா இன்னும் இல்லையா ? நீங்க ஊசி போட்ட நாய் எது ஊசி போடாத நாய் எது என்று கழுத்தில் எதுவும் லைசன்ஸ் பட்டை கட்டி விட்டு இருகின்றீர்களா ?

    ReplyDelete
  2. கிட்ட தட்ட ஒரு லட்சம் ரூபாய் எந்த நாய்க்கு செலவு பண்ணி இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி...

      பேரூராட்சியில நடந்த சுதந்திர தினத்தின நிகழ்ச்சியில் கொடுத்த லட்டுக்கு எவ்வளவு செலவானுச்சுன்னு கூட ஆர்டிஐ ல கேக்கனும்னு விருப்பம். நேரமின்மையால் முடியலங்க.

      இதுபோன்ற சின்னச் சின்ன விசயங்கள பள்ளிக்கூட மாணவர்களுக்கு டிரெயினிங் கொடுத்து எழுதிப்போட பழக்கனும்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. இப்படிப்பட்ட கடிக்காத குட்டிபோடாத பொம்மை நாய்கள் அதிரைக்கு தேவையா?

    கல்லெரிந்து அதோட சலுவுனா கூட கடிக்காதா?

    இம்மாதிரி நாய் என்று நாம் பழகி விட்டால் உடையிலும் உரசிச் செல்லுமே!

    இதுக்கு போய் 500 ரூபா செலவு பண்ணுரதுக்கு குட்டி ஆடுகளை வாங்கி பேரூராட்சி சார்பில் வளர்த்து மானிய விலையில் குர்பானிக்கு ஆடு வழங்கினால் நன்மையாகவாவது இருக்குமே!

    ReplyDelete
  4. நல்ல ஒரு முயற்சி அதிரை பேரூராட்சித் தலைவரை பாரட்டிகிறோம் .............
    அதிரையில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது......இதை தடுக்க எதும் கொசுக்கலுக்கு குடும்ப கட்டுப்பாடு இருக்கிறதா ............

    ReplyDelete
  5. எப்படியோ நம்ம சேர்மன் ஒரு ஒரு லட்சம் ருபாய் கணக்கை சொல்லிட்டாரு.இனி அவர் பட்டியலில் எழுத ஈசியாக இருக்கும்

    ReplyDelete
  6. பண்ணியை ஒழிச்சீங்களே அதுமட்டும் சட்ட விரோதமாகாதோ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.