.

Pages

Wednesday, September 18, 2013

முத்துப்பேட்டையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் !

முத்துப்பேட்டையில் அனைத்து இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

ஊர்வலம் முத்துபேட்டை தர்கா, ஆசாத் நகர், பழைய பேருந்து நிலையம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செம்படவன்காடு பாமினி ஆறுவரை ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டன. 3000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




Image Credit : Facebook

3 comments:

  1. கோவையில், இந்து அமைப்புகளுக்கிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் சிவசேனா அமைப்பின் நிர்வாகி வீட்டில் எதிர்த் தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாப்பநாயக்கன்பாளையம் சீர்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் சிவசேனா அமைப்பின் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்றிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டினை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. குண்டு, வீட்டின் முன் பகுதியில் விழுந்து வெடித்துள்ளது. சப்தம் கேட்டு வெளியே வந்த முத்துகுமாரின் உறவினர்கள் வீட்டின் முன்பு தீ பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயை அணைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்குத் தகவல் போனது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார், கைரேகைளைப் பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டின் பாகங்களையும் மீட்டனர். விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக முத்துக்குமாருக்கும், விஎச்பியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சுபாஷ்தான் தனது வீட்டில் குண்டு வீசப்பட்டதற்குக் காரணம் என முத்துக்குமார் போலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுபாஷ் தலைமறைவாகி விட்டார். அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ReplyDelete
  2. //3000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.//இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா.. இதுக்குப்பேரு திருவிழா கிடையாது... கேவலம்.. திருந்துங்கடா

    ReplyDelete
  3. இருந்தபோதிலும், நேற்று நடந்த இந்த ஊர்வலத்தில் பங்களா வாசல் அருகில் உள்ள முஸ்ஸிம் வீட்டிற்குள் கற்களை எறிந்துள்ளனர் இந்த காவிக்கும்பல்.
    கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய அந்த ஃபாசிஸ கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை. நடவடிக்கை எடுப்பர்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.