யாரு !? ஒரு நிமிஷம் இருங்க வந்துட்டேன்
அஸ்ஸலாமு அலைக்கும், என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கே[ன்] வர்ற வெள்ளிக்கிழமை செக்கடிப்பள்ளியில் காலை 11 மணிக்கு நிக்காஹ் நம்ம வீட்ல காலை பசியாற... பகல் மாப்பிள்ளை வீட்ல வலிமா... இரண்டுக்கும் நீங்க கட்டாயமா வரனும்
இன்ஷா அல்லாஹ்.
இந்தாங்க போயிராதிய செத்த நேரத்துல ரெடியாயிடும் பசியாறிட்டு போங்க.
இந்தா என்ன பசியாற ?
இது போன்ற உரையாடல்கள் அதிரையர்களுக்கு மட்டுமே சொந்தம் அதிகமாக பேசப்படும் வார்த்தைகள்
பசியை ஆற்றுதல் [ பசியை தணித்த ல்] பசிபோக்கும் உணவை அழகிய தமிழ் வார்த்தையில் பசியாற என்று நாம் குறிப்பிடுகிறோம் .
இட்டலி,தோசை.அப்பம்.இடியப்பம்,,, இவைகளுக்கு நாம் பசியாற என்போம் வெளியூர் இஸ்லாமியர்கள் நாஸ்டா என்றும் தமிழ் போற்றும் நல்லுலகம் சொல்லும் டிபன் [ TIFFAN ]
பசியை ஆற்றும் உணவுகள். சோறு,பிரியாணி, போன்றவைகளுக்கு நாம் பசியாற என்று சொல்வதில் ஏன் என்ற காரணமும் தெரியவில்லை
உதாரணம் இரவு கணவன் மனைவியிடம் கேட்பான் இன்னைக்கி என்ன பசியாற? அவள் சொல்வாள் இன்னைக்கி பசியாற பன்னால பகல் மிஞ்சின பிரியாணி இருக்கு என்பாள் பசியாற என்றாலே இடியப்பமும்,இட்லியும் ரொட்டியும் என்றாகி விட்டது.
வெளிநாட்டில் இருக்கும் நம் மக்கள் தம் தாய், மனைவி, பிள்ளைகள் இவர்களிடம் தொலைபேசி உரையாடலில் ?
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்லா இருக்கியா ?
சாப்டாச்சா ?
என்ன சாப்பாடு ?
என்ன பசியாற ?
இப்படி உரையாடல்கள் உரையாடப்படும் ! உடல் நலம் விசாரிப்பிற்கு பின். சாப்பாடு பற்றிய கேள்வி நிச்சயம் இருக்கும்
சரி அதிரை சொந்தங்களே நல்லா இருக்கீங்களா ? சாப்டீங்களா ?
வஸ்ஸலாம்
மு.செ.மு. சபீர் அஹமது
காக்கா பசியாற கூப்பிட்டுட்டு அஞ்சுகறி சோத்தை போட்டுட்டியலே :)
ReplyDeleteஇனிப்பு நீர், இரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளோருக்கு ஆத்திரத்தை உண்டும் பண்ணும் பதிவு !
உணவு விசயத்தில் அளவுக்கு அதிகமாகாமல் எதற்கும் எச்சரிக்கையாக இருப்போம் - உடல் நலம் பேணுவோம் !
Ethai parththu vaceththa anakku athekamana pace vanthathu shapek kaka allavakaielum puratshethan nan munpu thenasare pesppar lea parththean
ReplyDeleteugkalen ulaippai
n a n r e
n a n r e
சகோதரர் சபீர் அவர்கள். ஊர் விருந்து சகனை கண்ணில் காட்டி உள்நாக்கு வரை எச்சில் ஊற வைத்து விட்டீர்கள். சரி ஆமாம் ரொட்டி,கறி,கடப்பாசி,வட்டுலப்பம்,சேமியா கஞ்சி இல்லையா.?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎன்ன இது கல்யாண விருந்து என்று நினைத்தேன், சஹான்லே ஐந்துகறி அய்ட்டங்களை காண்பித்து, அட போங்க.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரைக்கு மட்டும் சொந்தமான பசியாற வகைகள்
ReplyDelete1.வெள்ளடை
2.ரால் கொளக்கட்டை
3.பிராச்சப்பம்
5.வண்டப்பம்
5.தக்கடி
6.உளுந்து கலி
மேலும் தெரிந்தவர்கள் பட்டியலிடவும்
பந்திக்கு முந்து படைக்கு பிந்து' என்ற பழமொழி எதற்கு கூறினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிரையரின் உபசரிப்புக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாத்தான் இவை இருக்கும் என நான் கருதியதுண்டு. அந்தளவிற்கு விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் நமதூரும் ஒன்று. உற்றார் - உறவினர்- நண்பர்கள் படை சூழ வந்திருந்த அனைவருக்கும் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படுகின்றன.
ReplyDeleteவாங்க காக்கா !
ReplyDeleteபேப்பரு தாங்க...
மூணு பேரா உட்காருங்க...
அங்கே ஒரு சஹன் வைங்க !
எங்கே தால்ச்சா ?
இங்கே சோறு பத்தலே...
எங்கே மறுசோறு ?
இன்னொரு சுவீட் எடுத்துத் தாங்க !
என இதுபோன்ற பழக்கப்பட்ட சந்தோஷக் குரல்கள் கலரிச் சாப்பாட்டில் அங்காங்கே ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்...
கவனத்தில் கொள்ளவேண்டியவை :
ReplyDeleteவைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும். உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண் விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கரை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம்.
Mutdaiappam, ralkuruma, murththapa, ravvathosai, edeyappam pearatdal,eneppu&karam, therumanam paceyaral, aruppu paneyan, vegkayapaneyan, amukku mutdai ennumpala
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehttp://ta.wikipedia.org/s/2mng
ReplyDeleteஉணவு விசயத்தில் அளவுக்கு அதிகமாகாமல் எதற்கும் எச்சரிக்கையாக இருப்போம் - உடல் நலம் பேணுவோம் !
ReplyDeleteMeala sonna varththaen vareyai unarnthu verunthu sappatdai athekamaka kuraikka nama allorum muyarche p a n n a l am a?
ReplyDeleteஇது வந்து அப்படி இல்லை, மாப்பிள்ளை வந்து பொன்டாட்டி கிட்ட எனக்கு ரொம்ப பசியா இருக்கு சாப்பாடு என்ன இருக்கு என் பசி ஆற்றுவாய் என்று சொன்னார்கள்,
ReplyDeleteஇருங்க எதவது செய்துகிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு ரொட்டி கொன்டு வந்தார்கல் அதை சாப்ட்பிட்டு விட்டு என் பசி ஆரி விட்டது, என்று
சொன்னார்கள், பொன்டாட்டி கேட்டார்கள் பசி
யாரிடுச்சா என்று கேட்டார்கள்,