இது ஒரு மீள்பதிவு :
சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்திற்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !
மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக ‘ஆசிரியர் தினம்’ வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
1. ஆசிரியர் தினத்தைப்பற்றி...
2. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்தான் என்ன ?
ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூர் காதிர் முகைதின் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களை கடந்த வருடம் குற்றாலம் மெயின் அருவியில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்ப்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் பிரபலமானவையாக திகழ்ந்தது.
இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.
முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முகைதீன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான 'புலித்தேவன்' என்ற சமூக விழிப்புணர்வைத் தூண்டும் மேடை நாடகத்தில் பங்குபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பு.
‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் கல்வித்துறையால் இரு முறை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், விருது கைநழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே !
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.