.

Pages

Tuesday, September 3, 2013

அதிரை நியூஸ்ஸின் தி.மு.க ஆர்ப்பாட்டம் குறித்த செய்திக்கு வாசகரின் விளக்கம் !

தங்கள் வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 28 தேதி செய்தியில்... எதிர் வரும் [ 05-09-2013 ] அன்று காலை 10.30 மணியளவில் அதிரையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நகர தி.மு. கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு  விடப்பட்டுள்ளது. என்ற தகவலுடன் தி மு க கழகத்தினரின் ஒரு அறிவிப்பு நோட்டிசை வெளியிட்டு இருந்தீர்கள்.

இதற்காக அதிரை நியூஸின் சீறிய முயற்சியால் பட்டுக்கோட்டை எம் எல் ஏ வை பலமுறை பேட்டி கண்ட போதெல்லாம் இந்த சாலை கோரிக்கையை முக்கியமாக வைத்து கேட்டதன் விளைவாக நம்ம எம் எல் ஏ  கலக்டருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசிலித்து மகிழங்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் வரை உடனடியாக புதிப்பிக்க சொல்லி கலக்டர் உத்தரவிட்டுள்ளார். இனி செக் மட்டும் பாஸ் ஆகவேண்டியது தான் பாக்கி இன்னும் ஒரு வார காலத்தில் செக் பாஸ் ஆகிவிடும் இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட தி.மு.க காரர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து அவர்களால் இந்த ரோடு போடாப்பட்டதாக ஒரு மாயை உண்டு பண்ண பார்க்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தை அதிரையில் நிறைந்து வழியும் குப்பை கூளங்களை சரி பண்ணச்சொல்லியும் அதிரை மக்கள் தினம் தினம் ஏங்கி தவிக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கச்சொல்லி அதிரை பேரூராட்சியின் முன் ஆர்பாட்டம் செய்யுமா தி மு க கட்சி ? அப்படி ஆர்ப்பாட்டம் செய்தால் அது உண்மையான கட்சியாக இருக்கும் ! எம் எல் ஏ  கலக்டருக்கு அனுப்பிய கோரிக்கை தின நாளிதழிலும் செய்தியாக வந்துள்ளது.
E.M.A. இப்ராஹீம்
emaibrhim78@gmail.com

3 comments:

  1. அவர்கள் எங்கே குடி தண்ணீருக்காக ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள் அதான் 60 ஆண்டுகால அதிரை வரலாற்றிலேயே இல்லாத இசுலாமிய பெண்கள் அதிரை பேரூராட்சியை முற்றிகையிட்டு காலி குடங்களை போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் செய்ததும் கடல்கரை தெருவில் குப்பை வண்டியை மறித்து போட்டு ஆர்ப்பாட்டம் செய்ததும் எங்கள் எஸ் எம் எஸ் பிரியடிலும் இல்லை உங்கள் எம்.எம்.எஸ் பிரியடிலும் இல்லை வெட்ககேடு அதிரை வரலாற்றில் இல்லாதது எல்லாம் நடக்கிறது ..

    ReplyDelete
  2. அதிரைக்கு கேடு அதிரையில் அதிசயங்கள் நடக்கின்றன .ஆம் ஊரெங்கும் குப்பை கூளங்கள் .../ நாறுகிறது அதிரை கேட்க நாதி இல்லை .தண்ணீர் பஞ்சம் மக்கள் காலி குடங்களுடன் ஆர்பாட்டம் நம் ஊரில் கேள்விபடாத ஒன்று .அதிரை சேர்மன் என்ன செய்துகொண்டு இறுக்கிறார் ..அவர் சார்ந்த பகுதி மக்களே அவரை வெறுத்து ஒதுக்கும்போது மேலதெரு பகுதி மக்கள் அவரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு .ஆடும் மர்மம் என்ன . ஒரு காலத்தில் பொருளாதார நிலையில் மந்தமாகி இருந்தது போக இன்று அல்லாஹ்வின் உதவியால் பொருளாதார நிலையில் மேம்பட்டு இருக்கின்றனர் .படிப்பில் முதலிடத்தில் உள்ளனர் ஏகப்பட்ட எம் பி பி எஸ் உருவாகி கொண்டுள்ளனர் அப்படி இறுக்க ஏன் இப்படி .....எங்கள் பகுதியில் அவரை வெறுத்து ஒதுக்கும்போது மேலதெரு மக்கள் அவரை கண்டுகொள்ளாமல் விட்டாலே அவருக்கு எந்த ஆதரவும் கிடையாது . படித்த மேம்பட்ட மேலதெரு மக்கள் சிந்திப்பார்களா அதிரைக்கு விடிவு காலம் பிறக்குமா .மீண்டும் அதிரைக்கு வசந்த காலம் வீசுமா

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும்
    மேல குறிபிட்டுள்ள நபர்கள் சொல்வதுபோல் நங்கள் குடியிருக்கும் நடுத்தெருவில் யாரும் நமதூர் பேரூராட்சி பெரும் தலைவர் அவர்களை ஒதுக்குவது இல்லை.குறிப்பாக கடந்த ஆண்டு சேர்மன் அவர்கள் கொண்டுவந்த பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை நாங்கள் எங்கள் முஹலவில் முழுமையாக பின்பற்றி சேர்மன் அவர்களுக்கும் நமதூர் பேரூராட்சி அலுவலற்கும் பெரும் உறுதுணையாக இருந்தோம்.

    தற்போது நடைமுறையிலுள்ள திருமண வீட்டிற்கு நேரடியாக வரும் குப்பை வண்டி எங்கள் பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.