.

Pages

Wednesday, September 4, 2013

தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு நமதூர் பொதுநலன் சார்ந்த கோரிக்கையை எடுத்துச்சென்ற அதிரை அப்துர் ரஹ்மான் அவர்கள் !

அதிரை நடுத்தெருவைச் சார்ந்த A.அப்துல் ரஹ்மான் என்பவர் கடந்த 12/02/2013 அன்று தமிழக முதல்வர் அவர்களின் தனி பிரிவு செயலாளர் அவர்களுக்கு நமதூர் மெயின் ரோட்டிலிருந்து மகிழங்கோட்டை வரை உள்ள பழுதடைந்த சாலையை புதுப்பித்துக்கேட்டு  மனுக் கடிதம் ஒன்றை தனிப்பட்ட முறையில் எழுதி அனுப்பியுள்ளார்.

அதற்கு  தமிழக முதல்வர் அவர்களின் தனி பிரிவு செயலாளர்  அவர்களிடமிருந்து வந்த பதில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  
Home | Lodge your Grievance | Track your Grievance | Feedback | Change Password | Contact Us | Log Out
Track your Grievance
NameA.ABDUR RAHMAN
Petition No2013/718612/RRPetition Date12/02/2013
Address52 A, MIDDLE STREET, ADIRAMPATTINAM, ADIRAMPATTINAM, Pattukottai TALUK, Thanjavur,Tamilnadu - 614701
Grievanceவணக்கம் மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்கள் எங்கள் ஊரில் உள்ள கிராமசாலைகள் அனைத்தும் மிகவும் பழுதாக உள்ளது அதை புதுப்பிக்க வேண்டுதல் சம்பந்தமாக 159 அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் இருந்து மகிழன்கோட்டை வரை செல்லும் தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது இந்த சாலை எங்கள் ஊரில் மிகவும் பயனுள்ளதாக உள்ளவையாகும் ஏனெனில் இந்த சாலையில் தான் மருத்துவமனை மற்றும் கடைதெரு வங்கிகள் மற்றும் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலை ஆகும் . இந்த சாலையை புதுப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் இப்படிக்கு அ.அப்துர் ரஹ்மான்
Grievance CategoryBASIC AMENITIES - ROAD FACILITIESPetition StatusAccepted
Forwarded to DistrictTHANJAVUR
Concerned OfficerDISTRICT OFFICERS - DISTRICT COLLECTOR
Replyஅதிராம்பட்டினம் - தொக்காலிக்காடு சாலை (வழி மகிழங்கோட்டை) கி.மீ.0/0-5/400 இதில் அதிராம்பட்டினத்திலிருந்து மகிழங்கோட்டை வரை கி.மீ.2.800 மிகவும் மோசமாக உள்ளது. பழுதுநீக்கம் செய்ய உத்தேசமாக ரூ.60.00 லட்சம் செலவாகும். 2013-14 ஆம் ஆண்டில் அரசு திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் எடுத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

தகவல் : A. அப்துல் ரஹ்மான் 
நடுத்தெரு அதிரை

12 comments:

  1. உங்களின் சிறந்த சமூகப்பணிக்கு வாழ்த்துக்கள்...

    உங்களைப்போல் பல நூறு அப்துர்ரஹ்மான்கள் நமதூருக்கு தேவை. அப்போதுதான் நகரம் வளர்ச்சி பெறும்...

    தற்போதைய மக்கள் விழிப்புணர்வை பெற்று வருவது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  2. அப்துல் ரஹ்மான் அவர்கள் தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு இந்தக் கோரிக்கை மனுவை அனுப்பி அதற்க்கான பதிலும் பெற்றிருப்பது பாராட்டிற்க்குரியது, வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் உங்களது சமூகச் சேவைப்பணி.

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்களது சமூகச் சேவைப்பணி

    ReplyDelete
  4. மேலும் நமதூரின் மற்ற குறைபாடுகளையும் கண்டறிந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்படி ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Well done Abdul Rahman,

    I really appreciate your effort and good to see their response too.

    Carry on.

    ReplyDelete
  7. அப்துல் ரஹ்மான் அவர்கள் தனிப்பட்ட முறையில் முதல்வருக்கு இந்தக் கோரிக்கை மனுவை அனுப்பி அதற்க்கான பதிலும் பெற்றிருப்பது பாராட்டிற்க்குரியது

    ReplyDelete
  8. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.தாங்கல் தனிப்பட்டு முயற்சி செய்வதை விட பைதுல் மால் போன்ற பொது தொண்டு அமைப்புகள் மூலம் முயற்சி செய்தால் பலனை சீக்கிரம் அன்பவிக்க எதுவாக அமையும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.