அதிரை பிலால் நகரைச் சார்ந்தவர் மாலிக். இன்று நடைபெற உள்ள அவரின் திருமணத்திற்காக ஈசிஆர் சாலையில் உள்ள அவரதுவீட்டிலிருந்து வாகனமொன்றில் ஏறி நண்பர்களுடன் திருமண மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது செய்னாங் குளத்தின் கழிவுகளை அள்ளிக்கொண்டு வந்த ட்ராக்டர் எதிரே வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தன. மேலும் வாகனத்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்த அவரது நண்பர் அபூதாகிர் மீது மோதியதில் காயங்கள் ஏற்பட்டன. உடனே அருகில் நின்றவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
ECR சாலையில் வேகமாக செல்வதை தவிர்க்கவும்.
ReplyDeleteஇச்சம்பவத்தை பார்த்தும் நாம் திருந்த வேண்டும்.