.

Pages

Saturday, February 22, 2014

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 பணியிடங்கள் !

TNPSC GROUP 2-A - 2,269 காலியிடங்கள் :
அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 உதவியாளர், நேர்முக எழுத்தர் பணியிடங்களை நிரப்ப மே மாதம் 18-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அறிவித்துள்ளது.

நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் நேர்காணல் உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வும் நேர்காணல் இல்லாத பணியிடங்களை (உதவி யாளர்) நிரப்புவதற்கு குரூப்-2-ஏ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

அந்த வகை யில், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் மற்றும் சிறைத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்பட பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளில் " 2,269 காலியிடங்களை" நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வெழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும்முறை, தேர்வுக்கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf

பரிந்துரை : 'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.