அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படுகின்ற இந்த போட்டியானது 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வரகின்றவர்களுக்கு விளையாட்டு மேம்படுத்தி மாணவர்களை ஊக்கவிப்பதற்காக தலா ரூபாய் 6000 வழங்கியுள்ளார்கள். இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பரிசு பெற்றனர்.
1. பி. முத்துராசு 8 ம் வகுப்பு 400 மீட்டர் முதல் இடம்
2. எச். பயாஸ் அகமது 8ம் வகுப்பு 200 மீட்டர் 5ம் இடம்
3. ஏ. அஜ்மல் கான் 6ம் வகுப்பு 100 மீட்டர் 6 வது இடம்
நம் மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜனாப் செய்யது முஹம்மது புஹாரி மற்றும செயலாளர் தமீம் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்கள்.
உதவி தலைமை ஆசிரியர்கள், இதர ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான திருவாளர்கள் ராஜா, ஜெயகாந்தன் மற்றும் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் பாராட்டை பெற்றனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

அஸ்ஸலாமு அழைக்கும்.
ReplyDeleteபாராட்டுக்கள் வெற்றி பெற்ற மாணவர்கள் மேம்மேலும் வெற்றி பெற வாழ்த்து கிறோம் .
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.!
ReplyDeleteஇந்த வெற்றியை அடித்தளமாகக் கொண்டு இன்னும் விளையாட்டுத்துறையில் வளர்ந்து மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த விளையாட்டுதுறை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDelete