இந்த தொடரில் அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு அணிகள் பங்கேற்று தனித்திறமையை நிருபித்து வந்தனர். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பிலால் நகர் அணியினரும் [ BSC ] , கடற்கரைதெரு அணியினரும் [ ABCC ] மோதினர்.
முன்னதாக டாஸ் வென்ற பிலால் நகர் அணியினர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் கடுமையாக மோதினர். ஆட்டத்தின் இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கடற்கரைதெரு அணியினர் [ 68/3 ] 17 ரன்கள் வித்தியாசத்தில் பிலால் நகர் அணியை வென்றனர்.
இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 'சமூக ஆர்வலர்' அஜ்மல்கான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற கடற்கரை தெரு அணியினர் மற்றும் பிலால் நகர் அணியினருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
ஆட்டத்தின் நாயகனாக கடற்கரைதெரு அணியை சேர்ந்த அஹமது சேக் அலாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கும், வெற்றியை நழுவவிட்ட அணியினருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteAFCC அணி சார்பாக - இர்ஃபான்
இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிரை பிலால் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ BSC ] சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்று நமது தெருவிற்கு (கடற்கரைதெரு) பெறுமை சேர்த்து தந்த அணைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.