.

Pages

Wednesday, February 12, 2014

ரூ 55 லட்சம் மதிப்பீட்டில் அதிரையில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் !

தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க தமிழக அரசின் சார்பாக கடந்த ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்றாக இருந்தது. இந்த கட்டிட பணிக்காக நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்கள் தனக்கு சொந்தமாக உள்ள [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.

அரசு இந்த கட்டுமானப் பணிக்காக ஆரம்பத்தில் ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்து இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரூபாய் 55 லட்சம் மதிப்பிட்டில் கட்டிடம் கட்டுவதற்குரிய பணியை இன்று காலை முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மூன்று மாத கால அவகாசத்தில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப்பணிகளுக்காக ஊழியர்கள் தங்குவதற்காக அதன் அருகே குடிசைகளும் போடப்பட்டுள்ளன.

இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் அரசு அலுவலர் கருணாகரன், பொறியாளர் கர்ணன், ஜஹபர் அலி, பிரின்ஸ் ராவுத்தர், பத்திர எழுத்தர் ராஜூ, சம்சுதீன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது சார்பதிவாளர் அலுவலகம் அதிரை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள வாடகை கட்டிடத்தில்தான் பல ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.




3 comments:

  1. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.......மேலும் ஊருக்கு மத்தியில் உள்ள யானையன் குளம் போன்றவற்றின் ஒருபகுதியை தூற்று விட்டு இதுபோன்ற அரசு அலுவலகங்கள் வரும்பட்சத்தில் மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நமதூரின் பாதி மக்களுக்கு உரிய VAO அலுவலகம் இங்கு இடவசதி இல்லாமல் ஏறிப்புறக்கரையில் இயங்கி வருகின்றது, அதை மீண்டும் இங்கு மாற்ற ஏதும் வழிகள் உண்டா?

    அடேங்கப்பா இவ்வளவு தூரத்திலா? கேஸ் கம்பெனிக்கு போய்வரவே மூச்சு வாரி இறைகின்றது, இது போதாகுறைக்கு...........................!!??

    ஊருக்கு மத்தியில் இருப்பது நல்லது.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. எல்லாதிற்கும் அதிரை முஸ்லிம்கள். ஏமாளிகள் ?
    காரணம் அதிரைல் முக்கால் வாசி அரசு அலுவலங்கலுக்கு நிலம் நம்மவர்ஹளால் இலவசமாக கொடுக்கப்பட்டது .
    ஆனால் முக்கால்வாசி அன்பவிப்பது யாரோ !
    அரசால் கட்டப்பட்ட சமுக கூடம். இன்று கோவில் சொத்து !
    நமது இடத்தில உள்ள அல் அமீன் பள்ளிக்கு ஆயிரம் இடைஞ்சல்கள் !
    வள்ளல்களே கொஞ்சம் சிந்திபீர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.