.

Pages

Tuesday, February 25, 2014

அதிரையில் அதிசயம் ! பீடி, சிகரெட், மூக்குப்பொடி விற்பதை நிறுத்திகொண்ட பெட்டிக்கடை உரிமையாளர் !!

பொழுதுபோக்காக புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. இதனால் ஏற்படும் தீமையை அவ்வப்போது எடுத்துச்சொன்னாலும் காதில் வாங்கமாட்டார்கள்.

நாள் ஒன்றுக்கு பாக்கெட் கணக்கில் ஊதி தள்ளுவோரும் உண்டு. புகை பிடிப்பது தவறு என்று தெரிந்திருந்தாலும் இதனால் ஏற்படும் பயன் என்ன என்பதை அவர்களிடம் கேட்டால் சொல்லத்தெரியாது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் தண்டையார் சிராஜுதீன் [ வயது 64 ] கடந்த 25 ஆண்டுகளாக கடற்கரைதெருவின் பிரதான பகுதியில் 'பிலால் ஸ்டோர்' என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கே பீடி, சிகரெட், பான்பராக், சுருட்டு, மூக்குப்பொடி உள்ளிட்ட உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த வாரத்திலிருந்து இந்த பொருட்கள் விற்பது அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதால் இதன் உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக நேரடியாக ஸ்பாட்டிற்கு சென்றோம். கடையை அடைந்ததும் நம்மைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டு சிராஜுதீன் அவர்களிடம் மெதுவாக பேச்சு கொடுத்தோம்.

'ஆம், நீங்கள் கேள்விபட்ட செய்திகள் அனைத்தும் உண்மைதான். கடந்த 3 மாதங்களாக நண்பர் அன்வர் அலி என்னிடம் இதன் கேடுகள் குறித்து எடுத்துச்சொல்லி, இந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்வதை நிறுத்திக்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்து வந்தார்.

சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்னிடம் வந்து தாத்தா [ அப்பா ] ஒரு கட்டு பீடி, ஒரு பாக்கெட் சிகரெட் தாருங்கள் என என்னிடம் கேட்டு வரும்போது, இவர்கள் தீய வழியில் செல்வதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோமே என்று வருந்தியதுண்டு. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு முதலில் நான் கடந்த 30 வருடங்களாக மூக்குப்பொடி போடும் பழக்கத்தை விட்டுவிடுவது என முடிவுசெய்து அதன்படி பின்பற்றி அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் [ அல்ஹம்துலில்லாஹ் ] இதன் தொடர்ச்சியாக எனது கடையில் விற்பனை செய்து வந்த பீடி , சுருட்டு, சிகரெட், பாக்கு போன்றவற்றை விற்பதை அதிரடியாக நிறுத்திவிட்டேன். இதனால் இந்த பகுதியில் வசிக்கும் புகை பிரியர்கள் எனது கடையில் வந்து கேட்பதில்லை. இதில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. சமூகம் கெடுவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்ற முடிவில் இருந்துவருகிறேன். இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய இறைவன் அருள்புரிய வேண்டும்' என்றார்.

இதுகுறித்து TNTJ அதிரை நகர செயலாளர் அன்வர் அலி அவர்களிடம் கருத்து கேட்டபோது...
'இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட பொருட்கள் இந்த கடையில் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி பெண்கள், இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கடையின் உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் மற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பொருட்கள் விற்பனை செய்வதை சமூக நலன் கருதி நிறுத்தவேண்டும். இதற்காக என்னால் இயன்றளவில் பிற கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளேன். இதன் அடுத்த கட்டமாக கிளை நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்கு பிறகு இதுகுறித்து தெருமுனை பிரச்சாரங்கள், கடைகளின் உரிமையாளரை சந்தித்து வேண்டுகோள் வைப்பது உள்ளிட்ட பணிகளை தொடர முயற்சிப்போம்' என்றார்.

அதிரை வரலாற்றில் முதன்முதலாக பெட்டிக்கடை ஒன்றில் உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்ககூடிய பீடி, சிகரெட் விற்பனை இல்லை என்று விற்பனையாளர் முடிவு செய்து இருப்பது மகிழ்ச்சி தரும் மாற்றம் என்றாலும் இந்த மாற்றம் அதிரை மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள விற்பனை மையங்களிலும் பரவ வேண்டும்.


12 comments:

  1. நடுத்தெரு ஜப்பார் காக்கா கடையில் எனக்கு தெரிந்த வகையில் பல ஆண்டுகளாக பீடி, பாக்கு, புகையிலை , சிகரட் போன்ற உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்ககூடிய பொருட்கள் விற்கப்படுவது இல்லை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இது மாபெரும் வெற்றி.

    இதுபோல் நமது சமுதாய மக்கள் விழிப்புணர்வு அடைந்து இன்னும் அகற்ற வேண்டிய அனேக தீய காரியங்களை அகற்ற முயற்சி செய்யனும். அதுக்கு ஒத்துழைப்பும் ஒற்றுமையும் அவசியம்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. வரவேற்கவேண்டிய செய்தி...மற்ற கடைகாரர்களும் இதேபோல் பின்பற்றினால் நோயற்ற வாழ்வு குறைவுற்ற செல்வம் தான்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    ஆம் சகோதரர் அபுறார் ஹுசைன் அவர்கள் சொல்வதுபோலே கடந்த பலவருடங்களாக நமது ஜப்பார் காகா கடையில் இதுபோன்ற உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய எந்த பொருளும் விற்பதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை இவைபோன்ற கேடு விளைவிக்ககூடிய பொருள் உட்கொள்ளும் பெரியவர்கள் மற்றும் வாலிபர்கள் உடலும் உள்ளமும் கெடுவதும் நிச்சயம்
    அருமை அமைப்புகளே இந்த பொருள்களை மட்டும் விற்பதை நிறுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு மேற்கொள்ளாமல் மேலும் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்காகூடிய LAYS, KURKUR மற்றும் பல பெயர்களில் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு கடைவீதிகளில் தொங்கவிடப்பட்டுரிக்கும் பெரும்பாலான பொருள்களும் நமது அன்புக்குழந்தைகலின் உடலின் நலத்தையும் ,உடல் பலத்தையும் மூளை மங்க வைக்கூடிய தன்மை அதிகமாக இருப்பதாகவும் இதனால் அவர்களின் நோய் எதிர்ப்புசக்தியை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக SLOW POISON போலே குழந்தைகளின் உடலின் இரத்தை உறிஞ்சி உயிரை பறிக்கும் அபாயகரமான நச்சுத்தன்மை யுடைய பல ரசாயன கலவை கலப்பதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டு அதை மக்களுக்கு படம்போட்டும் காண்பிக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள் ஆகையால் இவைகளை விற்பதை விட்டும் அன்புக்கலகம் சார்த்த சகோதர்களால் இருந்தார்லும் சரி மற்ற ஏனைய மக்களாக இருந்தாலும் தங்களின் கடைகளில் விற்பதை விட்டும் உங்கள் குழந்தைகள் அதனை வாங்கி உட்கொள்வதை விட்டும் தடுத்துக்கொள்ளுங்கள் இதன்மூலம் நம் அனைவரையும் அல்லாஹ் கொடிய நோயிலிருந்து பாதுகாத்து நீண்ட அயிலை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  5. This the first news web site (Doing Social Service) and giving information about our native place for who staying out of the country. Thanks for Adirai News .....By Ismail from Saudi

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹு...

    சகோதரர்கள் செய்ய தொடங்கியது நல்ல விஷயம்.. பல வருடங்களாக மேலதெருவில் உள்ள அல்பகியாத் பள்ளியின் இமாம் அப்துல் மஜீத் அவர்களுடைய கடையிலும் விற்பதில்லை.. எனக்கு தெரிந்து அதிரையில் இதுபோல பொருட்கள் விற்காமல் இருந்த முதல் கடை அந்த கடைதான்..

    7up, coca cola, pepsi, sprite இதுபோன்ற அணைத்து விதமான பானங்களிலும் ஆல்கஹோல்(Alcohol) சேர்க்கபடுகிறது.. இதைகுடிக்கும் ஒவ்வொருவரும் ஆல்கஹோல் குடிபதற்கு சமம்.. அதுவும் இல்லாமல் இதில் கபின் என்ற ஒரு பொடியும் சேர்கிறார்கள். அதனுடைய தன்மை என்னவென்றால் ஒருமுறை குடித்தால் அதை குடித்துகொண்டே இருக்க துண்டும்.. இதையெல்லாம் கருத்தில் கொண்டு campus front of India என்ற மாணவர் அமைப்பு மாபெரும் ஆர்பாட்டத்தை சென்னையில் நடத்தி உள்ளது.. இனிமேல் இதுபோல பானங்களையும் விற்க மாட்டேன் என்று நாம் முன்வரவேண்டும்..

    ReplyDelete
  7. மதுக்கடைகளை மூடிவிடு, புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு இப்படியெல்லாம் வெரும் விளம்பரங்களாக மாத்திரமே பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது என்பது கைக்கூடா காரியமாகவே இருக்கிறது.
    இதற்கு அடிப்படை வேர்களிலிருந்தே ஆரம்பிக்கனும், இதற்கு முன் உதாரணமாக இங்கே உள்ள சின்ன பெட்டிக்கடையிலிருந்து விதை தூவப்பட்டிருக்கு.. இதை முழுமையாக எல்லா கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் கொண்டு சேர்த்தால் புகையில்லா ஒரு சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கு. அதன்மீதிலிருந்து வரும் வருமானம் ஒருபொருட்டல்ல என்ற காக்காவின் முடிவிற்கு அல்லாஹ் நற்கூலி தருவான்.

    ReplyDelete
  8. Thampe markala peede, sekerat patre sonnegka adirampattinam kalare soru patre yarum sollavellayea entha kalare sotral 1 aandukku 10kkum mearpatda naparkal erakkenranar thampekala kalare sotra patre katdurai podugkalean

    ReplyDelete
  9. சின்ன பெட்டிக்கடைகள்லிருந்து விதை தூவப்பட்டிருக்கு இதை முழுமையாக எல்லா கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் கொண்டு சேர்த்தால் புகையில்லா ஒரு சமுதாயம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கு

    ReplyDelete
  10. சென்னை பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ஒருகடையில் இதே போல் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பாண் ,பீடி ,சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விர்க்கப்டுவதில்லை என போர்டே போட்டுள்ளார் இவ்வளவுக்கும் அவர் ஒரு மாற்றுமத சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கடை அமைந்து இருக்கும் இடத்தில் இவர் நினைத்தால் எக்கச்சக்கமாக லாபம் ஈட்ட முடியும் . அல்லாஹ் அவருக்கு ஹிதாயத்தை கொடுப்பானாக .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.