.

Pages

Monday, February 17, 2014

மக்களிடம் வாங்கும் பணத்துக்கு ரசீது ! பத்திர எழுத்தர்களுக்கு அதிரடி உத்தரவு !!

நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பொதுமக்களிடம் வாங்கும் பணத்திற்கு ரசீது வழங்கவேண்டும் என்று பத்திர எழுத்தர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பத்திர பதிவு அலுவலகங்கள் முற்றிலுமாக கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்து வாங்குவோர், விற்போர் மற்றும் சாட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் தவிர வேறு யாரும் பத்திர பதிவு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வாங்குவோர் மற்றும் விற்போர் அங்குள்ள கேமரா மூலம் படம் எடுக்கப்படுகின்றனர். இதனால் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட தவறுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொத்து பத்திரங்களை எழுதும் ஆவண எழுத்தர்களுக்கு தமிழக அரசு பத்திர பதிவுத்துறை சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆவண எழுத்தர்கள் கண்டிப்பாக அடையாள அட்டைகள் அணிய வேண்டும். ஆவணங்கள் அழகாகவும், தவறின்றியும், புரியாத வார்த்தைகளை பயன்படுத்தாமலும் எழுத வேண்டும். விலைக்கு வாங்கும் தொகையை குறைக்காமலும் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தாமலும் ஆவணங்களை எழுத வேண்டும். இடைத்தரகராக செயல்படக் கூடாது. எழுத்தர்களே சாட்சிகளாகவும் இருக்கக்கூடாது.

ஆவண எழுத்தர்கள் பத்திரங்கள் எழுத பத்திர பதிவு அலுவலக வளாகத்தை பயன்படுத்தக் கூடாது. ஆவணத்தில் விலை தொகை, ஆவண தேதி, சர்வே நம்பர், சந்தை மதிப்பு போன்றவற்றை எண்ணாலும், எழுத்தா லும் எழுத வேண்டும். சொத்துக்களை நேரில் பார்வையிட்டு அரசுக்கு இழப்பு ஏற்படாத வண்ணம் ஆவணம் எழுத வேண்டும்.ஆவண எழுத்தர்கள் பதிவு செய்யப்படும் ஆவணங்கள் குறித்து பதிவேடு, ரசீது போன்றவற்றை பராமரிக்க வேண்டும். கணக்குகளை அன்றாடம் பராமரித்து, பொதுமக்களிடம் வாங்கும் பணத்திற்கு ரசீது வழங்குவதுடன் பதிவுத்துறை அதிகாரிகள் கேட்கும்போது அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.