.

Pages

Friday, February 21, 2014

அதிரையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயம் !

அதிரை சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் [ வயது 37 ] இவர் கனரா வங்கியில் அலுவலக ஊழியராக பணி செய்து வருகிறார். வாட்டாக்குடியை சேர்ந்தவர் பூமிநாதன் [ வயது 38 ] இவர் அதிரை வண்டிப்பேட்டையில் உள்ள தனியார் தேங்காய் மண்டியில் பணிபுரிகிறார்.

இன்று மாலை இவர்கள் இருவரும் தனித்தனியே இரு சக்கர வாகனங்களில் பயணமானார்கள். வண்டிப்பேட்டை அருகே கடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிகொண்டனர். இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் நின்றவர்கள் த.மு.மு.க ஆம்புலன்ஸை வரவழைத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே சிகிச்சை மேற்கொண்டு வரும் இருவரையும் த.மு.மு.க வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞர் காங்கிரஸ் பட்டுக்கோட்டை வட்டாரத்தலைவர் அதிரை மைதீன் ஆகியோர் உடனிருந்து கவனித்து வந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

1 comment:

  1. அதிராம்பட்டினத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடை பெற்றுவருகிறது. மேலும் ஒரு எடுத்துக்காட்டாக இந்த வாகன விபத்து நடைபெற்று உள்ளது. விபத்தில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு முதல் உதவி செய்வதற்கான வசதிகள் ஏதும் இல்லை. இதனோடு பெரிய அளவில் காயப்பட்டு வரும் நபர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கான எந்த வசதிகளும் அரசு மருத்துவமனையில் இல்லை. இவ்வசதிகளை பெறுவதற்கு பெரிய அதிகாரிகள் சிபாரிசு செய்து உடனடியாக அவ்வசதிகளை பெற அதிகாரிகள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் உயிர் சேதாரம் ஏற்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.