அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் வெள்ளி கிழமை (07-02-2014) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோதரர் PMS. அமீன் அவர்கள் இல்லத்தில் மிக சிறப்பான முறையில் நடை பெற்றது கூட்டத்தில் அமீரக அமைப்பின் முக்கிய செயற்குழு நிர்வாகிகள் மற்றும் இதர உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் :
1. சென்ற ஆண்டு நமது தெருவில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது போன்று இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டும் பள்ளி கோடை விடுமுறையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்று முடிவு செய்ய பட்டது
2. வட்டி, வரதட்சணை, மது போன்ற சமுதய சீர்கேடுகளை நமது ஊரிலிருந்து அகற்றுவதற்கு சமுதாய சீர்திருத்த மாநாடு நடத்துவது என்று முடிவு செய்ய பட்டது
3. அடுத்த பொது குழு கூட்டம் துபாய் ஹோர் லாஞ்ச் அபிப் பேகரி அருகே உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெரும் என்று முடிவு செய்யப்பட்டது.
இப்படிக்கு,
அதிரை கடற்கரைதெரு அமீரக அமைப்பு
[ ADIRAI BEACH EMIRATES ASSOCIATION ]
செய்தி தொகுப்பு : M. ஜாஹிர் ஹுசைன் BBA
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கூட்டத்தில் கலந்துகொண்டு எடுத்த முடிவுகள் அவ்வளவும் நன்று. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
மேலும் நமதூர் பகுதிகளில் நூற்றுக்கு பல பத்து சதவிகிதங்கள் எல்லாமே போலிகளாகவே இருக்கின்றது, இது பெண்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு சொட்டு விழிப்புணர்வு கூட இல்லாமல் இருக்கின்றது. இது இப்படியே நீடித்தால் அது சொல்வதற்கு இல்லை.
ஆகவே வெளியூர்களில் பணம் ஈட்டுவதற்காக சென்றிருக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள், கணவர்கள் தயவு செய்து கவனத்தில் ஏற்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.