.

Pages

Tuesday, February 4, 2014

அதிரை வாலிபரை காணவில்லை !

அதிரை மஹ்தூம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காலஞ்சென்ற முகம்மது இஸ்மாயில். இவரின் மகன் முஹம்மது அலி [ வயது 31 ] . இவர் சற்று மனநிலை பாதிப்படைந்து காணப்பட்டார். மஹ்தூம் பள்ளிவாசல் தெருவில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். இவர் கடந்த [ 30-01-2014 ] அன்று காலை 8 மணிக்கு தேநீர் அருந்திவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் இதுவரையில் வீடு திரும்பாதது இவருடைய குடும்பத்தினரை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

காணாமல் போன அன்று வெள்ளை வேட்டி, சாக்லேட் கலரில் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார். காணாமல் போனது குறித்து இன்று அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் வேண்டுகோள் படி அதிரை நகர த.மு.மு.கவினர் பொறுப்பெடுத்துக் கொண்டு காணாமல் போன சகோதரரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவரை பற்றி தகவலறிந்தவர்கள் அதிரை நகர த.மு.மு.க நிர்வாகிகளை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

9003127748 / 9944449848 / 9942033233

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.