இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையேற்று ஆங்கில மொழியின் அவசியம் குறித்து பேசினார். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆங்கில துறை பேராசிரியர் முனைவர் A. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நிகழ்த்திய சிறப்புரையில் 'ஆங்கில மொழி பிற மொழிகளோடு கொண்டுள்ள வேறுபாடுகள் மற்றும் அதன் சொல்வளம்' ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் A. முகம்மது முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்சிகள அனைத்தையும் ஆங்கிலத்துறை பேராசிரியை MA. தஸ்லீமா அவர்கள் அழகாக தொகுத்து வழங்கினார். இறுதியில் பேராசிரியை E. பிளோமினா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
Wishing you all the best Mrs. Thasleema.
ReplyDeleteஆங்கில மொழியின் சிறப்பு குறித்து கருத்தரங்கம் நிகழ்ச்சி காதர் மொய்தீன் கல்லூரியின் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. ரொம்ப சந்தோஷம் ஒன்னாம் வகுப்பு முதல் பதிரண்டம் வகுப்பு வரை நாம் ஆங்கிலமொழியில்தன் படிக்கிறோம் ஆனால் நமக்கு பேசவும், எழுதவும், தெரிவதில்லை. கல்லூரிக்கு சென்றால் அங்கே ஆங்கலத்தில் பாடம் நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு ஒன்று புரிவதில்லை திணறுகிறார்கள். அது மட்டும் அல்ல வேலைக்கு சென்றகூட ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தால் மட்டுமே வேலை கொடுகிறார்கள். ஆசிரியர்களே, பள்ளி நிர்வாகிகளே, இதை நினைவில் வைத்து இனியாவது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பேசவும், எழுதவும், மாணவர்களுக்கு பயிற்சி அளியுங்கள்.
ReplyDelete