காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும் நேற்று 27.02.2014 வியாழக்கிழமை மதரசா மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.ஏ.முகம்மது அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த (கேரளா றஹ்மாணியா அறபுக்கல்லுரியின் முதல்வர்) கே.ரீ. முஹம்மதுக் குட்டி முஸ்லியார்(பாஸில் பாகவீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு இணைப்பாளரும், கொழும்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சீ.எம்.பாஸில்(குமைதி)அவர்களின் விசேட சிறப்புரையும் இடம் பெறறது.
இதன்போது ‘ஷைகுல் பலாஹ்’ அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹும் அப்துர்றஹ்மான் அவர்களினதும் சிறப்புக் கூறும் “என்றும் இலங்கும் இரு மணிகள்” என்னும் நூல் வெளியிடப்பட்டதுடன் இந்நூலில் ‘ஷைகுல் பலாஹ்’ பற்றி சிறப்புக் கவிதை புனைந்த மௌலவி ஏ.எல.எம்.எம்.முஸ்தபா பலாஹி(சூபி ஹஸரத்) அவர்கள் அதிதிகளால் மக்கத்துச் சால்வை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இவ் விழாவில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், தென் இந்தியா அதிராம் பட்டின றஹ்மானியா அறபுக் கல்லுர்ரி பேராசிரியர் ஏ.ஜே முஹம்மத் நெய்னா ஆலிம் ஸாஹிப் (றஹ்மானி அத்றமீ), சம்மாங் கோட்டுப் பள்ளிவாயல் பிரதம இமாம் மௌலானா மௌலவி எஸ்.ஓ.எம் காழி அலாவுதீன் ஆலிம் பாஸில் பாகவீ உட்பட உள்ளுர் வெளியூர் உலமாக்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஒன்பது ஹாபிழ்களுக்கும் ஏழு மௌலவிமார்களுக்கும் “பலாஹி” பட்டமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“பலாஹி” மௌலவி பட்டம் பெற்றவர்களின் பெயர் விபரம்
எம்.எஸ்.எம்.பயாஸ் – காத்தான்குடி, எம்.எச்.எம்.அனஸ் – புநொச்சிமுனை, எம்.எம்.எம்.நுஸ்ரி – காத்தான்குடி, எம்.ஜே.எம்.ஜப்ரான் – காத்தான்குடி, எம்.எ.எம்.ஹபிழ் – பாலமுனை, எம்.எ.எம்.அஸ்பர் – வாழைச்சேனை, ஐ.சப்ராஸ் – ஓட்டமாவடி.
தகவல் : அபூ ஒசாமா
Source : www.newsbest.net
Agkalpasththukkureya ulamakkal allorayum onraka kanumpothu akamkulerukenrana
ReplyDeleteகாண மிகவும் சந்தோஷமாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteமாஷா அல்லாஹ் ...பார்பதற்கு அல்ஹம்துலில்லாஹ் ,இப்பொழுது உள்ள இளம் ஆலிம்கள் கையில் "லேட்டஸ்ட் லேப்டாப் "அண்டை நாட்டுக்கு நம் ஆலிம் போனாலும் அங்கும் ஆலிம்களின் ஒவொரு அங்கமும் அக்கபூர்வமான் சாதாரன மெருகூட்டும் பண்பை நாம் உள்நெஞ்சத்துடன் உணரமுடிகிறது
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
காண மிகவும் சந்தோஷமாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். சமுதாய பணி தொடர துஆ - வாழ்த்துக்கள்
ReplyDeleteகாண மிகவும் சந்தோஷமாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteவெளியூரில் உள்ள மதரசாவில் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதும், உள்ளூர் மதரசாவில் எடுக்க அனுமதிக்காதது எப்படி இருக்குன்னா...
ReplyDeleteஉள்ளூரில் தொப்பி போடாதவனை வம்புக்கிழுத்துவிட்டு, வெளியூரில் தானே தொப்பி போடாமல் தொழும் நிர்வாகிகளின் செயல்களைப்போல இருக்கு.
வரும் காலங்களில் நமதூர் ரஹ்மானிய்யா மதரசா நிகழ்வுகளின் புகைப்படங்களும் உள்ளூர் செய்தி தளங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா? அல்லது உள்ளூர் மதரசாவிற்கென தனியாக ஃபத்வா வழங்குவார்களா?
றஹ்மானிய ஹஜறத் அவர்களுக்கு போட்டோ எடுத்தது தெரியாது, தெரிந்த பின் அவர்கள் பேசும் போது அதனை கண்டித்த தோடு, வேலுர் பாக்கியாத் விழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்தும் போட்டோ எடுக்கவில்லை என்பதை எல்லாம் சொல்லிக்காட்டினார்கள்.போட்டோ எடுப்பது தெரிந்த பின்னர் கூட, யுத்தம் நடந்த நாடு அரசாங்க சட்டமாக இருக்குமோ என்று எண்ணியவர்கள் அங்கு இருந்தவர்களிடம் கேட்டு விட்டு கண்டித்தார்கள். ஆகவே அவர்கள் விசயத்தில் கண்ணியத்தை பேணிக் கொள்வது நல்லது.
ReplyDelete