.

Pages

Wednesday, February 12, 2014

அதிரையில் பெருகி வரும் கட்அவுட், பேனர்கள் கலாச்சாரம் ! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !!

அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டங்கள், புதிய நிர்வாகிகளின் புகைப்படங்கள், விளம்பரங்கள், வழிபாட்டு தள விழாக்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கண்ணீர் அஞ்சலி என்று கட்அவுட், பேனர்கள் கலாசாரம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் டிஜிட்டல் பேனர்களை அரசு அனுமதியோடு வைப்பதில் தப்பில்லை என்றாலும், சாலைகளை அடைத்துக் கொண்டு ரயில் பெட்டிகளை போல் தொடர்ச்சியாக பேனர்களை வைத்து இருப்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று மக்களை மிரட்டுவது போல் உள்ளது.

இது குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் நம்மிடம் கூறியதாவது...
'கட்சிகளின் நிகழ்ச்சிக்காகவும், விழாக்கால பண்டிகைக்காவும், கட்சிகளில் புதிய பொறுப்புகளை பெற்றவர்களும் சில வாரங்களுக்கு முன்பே டிஜிட்டல் பேனர்களை முக்கிய பகுதிகளில் போட்டி போட்டுக்கொண்டு வைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் கவனங்களும் சிதறுகின்றன. இடத்தை அடைத்து கொண்டு இருப்பதால் வியாபாரங்களும் பாதிப்படைகின்றன. 

இவற்றை அதிரை பேரூராட்சியும், காவல்துறையினரும் கண்டு கொள்ளமால் இருப்பது வேதனை தருவதாக இருக்கிறது. மீறுவோர் மீது பாராபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள், விழா ஏற்பாட்டாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுபாடுகளை மதித்து பிறர் பாதிப்படையா வண்ணம் நடந்துகொள்ள வேண்டும்' என்ற வேண்டுகோளை வைத்துவிட்டு முடித்துக்கொண்டனர். 

கட் அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பாக அரசு என்ன சொல்கிறது ? என்பது குறித்து 'சமூக ஆர்வலர்' ஜெஹபர் சாதிக் நம்மிடம் கூறியதாவது...
பேனர்களை வைப்பதற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வார். வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு உள்பட்டு இருந்தால் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும். பேனர்களை 6 நாள்கள் வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

1. அதற்கான கட்டணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் ரூ 200, நகராட்சிப் பகுதிகளில் ரூ 100, பேரூராட்சிப் பகுதிகளுக்கு ரூ 50 வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் திருப்பித்தரப்படாது.

2. 10 அடி அகலத்துக்கு குறைவாக உள்ள சாலைகளில் பேனர்களை வைக்கக்கூடாது.

3. 10 முதல் 14 அடிகள்வரை அகலம் உள்ள சாலைகளில் ஒருபுறமும், அதற்கு மேல் அகலமாக உள்ள சாலைகளில் இருபுறமும் பேனர்களை வைத்துக் கொள்ளலாம்.

4. கல்வி நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நினைவுச் சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்கள் ஆகியவற்றில் பேனர்களை வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதேசமயம், வணிக ரீதியாக ஒருவரது இடத்தில் அல்லது நிலத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அதற்கு அனுமதி அளிக்கப்படும்.

5. பேனர்கள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்தால், நகராட்சி நிர்வாகத் துறைக்கு மேல்முறையீடு செய்யலாம். அனுமதி மறுக்கப்பட்டதற்கான நோட்டீஸ் கிடைத்ததும் 13 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். இதற்குக் கட்டணமாக ரூ 500 செலுத்த வேண்டும்.

2 comments:

  1. பெயருக்கு தான் காவல் துறை உங்கள் நண்பன் மற்றபடி பொது மக்கள் நலனுக்கு அல்ல. செங்க மலக்க்கன்னன் இப்போ இல்லையே , புதுசா வந்த அதிகாரியும் அப்படியோ!.

    ReplyDelete
  2. கடைகலை இடித்தது கட்அவுட் வைக்கவா ???????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.