.

Pages

Tuesday, February 11, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற மீலாது விழா நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த [ 06-02-2014 ] அன்று காலை 11 மணியளவில் கல்லூரியின் கலையரங்கில் மீலாத் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்திய காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முனைவர் மு. அப்துல் சமது அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக கிராத் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்களால் தமிழ் மொழியில் வழங்கினார். 

நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார் தமிழ்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. மேலும் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றிய சிறப்பு பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழும், குர்ஆனும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே. மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.