இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை ஓய்வு பெற்ற நீதிபதியும், MKN ட்ரஸ்டின் நிர்வாகியுமான நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமையுரையும், திருச்சி ஓய்வு பெற்ற புள்ளியல்துறை இணை இயக்குனர் கவியருவி P. கலைமணி அவர்கள் சிறப்புரையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் கல்வி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் A. செல்வம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவித்தனர்.
பட்டங்கள் பெறுவதற்கு முன்பு மாணவ மாணவியருக்கு உறுதிமொழியை கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் எடுத்தார். முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் சிலார் முஹம்மது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லுரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் N. முஹம்மது முகைதீன் நன்றியுரை வாசித்தார். நிகழ்சிகள் அனைத்தையும் பேராசிரியர் முனைவர் ஆஷிக் இக்பால் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் துளிகள் :
1. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் பட்டங்கள் பெறும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
2. பல்வேறுப் பாடப்பிரிவுகளில் தரங்கள் மற்றும் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 675 இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
3. புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் இந்த அரங்கம் கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்சிகள் இதில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆண்டு தோறும் இந்த அரங்கம் எண்ணற்ற பட்டதாரிகளை அனுப்பி வருவது குறிப்பிடதக்கது.
பட்டங்கள் பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
pathivirku nandri
ReplyDeleteNandri Muttum Thana Party Ellaya Mr. ismail
ReplyDeleteபட்டங்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு என்னுடைய வாழ்த்துகள்
ReplyDeleteபட்டங்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு என்னுடைய வாழ்த்துகள்
ReplyDeleteReply
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துகொள்ளவேண்டும். இனி நீங்கள் வேலை தேடி பல நிறுவங்களை தொடர்பு கொள்விர்கள் . அப்போது உங்களிடம் பல கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் கேள்வி கேட்பார்கள். அது மட்டும் அல்ல பக்கத்து மாநிலத்துக்கோ, அரபு நாட்டுக்கோ வேலைக்கு சென்றால் கூட ஹிந்தி தெரியுமா என்று கேட்பார்கள். மாணவர்களே நீங்கள் உங்கள் அறிவை வளர்த்து கொள்ளுங்கள். ஆங்கிலமும், ஹிந்தியும், நன்றாக தெரிந்தால் வேலை நிச்சயம் உண்டு.
ReplyDeleteபட்டம் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ReplyDeleteமேலும் மேற்க்கல்வி பயின்றுவென்று வர வாழ்த்துக்கள்.
பட்டங்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.......
ReplyDeleteபட்டங்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.......
ReplyDeleteபட்டங்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.......
ReplyDelete