.

Pages

Friday, February 21, 2014

அதிரையில் நடைபெற்ற மருத்துவ முகாமை ரெங்கராஜன் MLA துவக்கி வைத்தார் !

இன்று காலை 10.30 மணியளவில் இந்திய அரசு உப்புத்துறை சார்பில் அதிரை செல்லியம்மன் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உப்பளத் தொழிலாளர்களுக்கான பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை மருத்துவ முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA துவக்கி வைத்தார்.

இதில் கோட்டாட்சியார் முருகேஷ், தாசில்தார் பாஸ்கரன், வருவாய் அலுவலர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன், உப்புத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கெளசல்யா, சீனிவாசன், செல்வராஜ், கார்த்திகேயன், ஸ்ரீநாத், கலைசெல்வன் ஆகியரோடு வாசன் கண் மருத்துவமனை குழுவினர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக உப்பு உற்பத்தியாளர்கள், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், நகர செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், நகர  இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், இஸ்மாயில், புர்ஹானுதீன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை பெற்றுச்சென்றனர்.








1 comment:

  1. தேர்தல் வரும் நேரத்தில் எல்லாம் இனி நடக்கும் - தெரு சாலைகள் சீரமைக்கப்படும் - குப்பைகள் அள்ளப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MP இனி வருவார்கள் - மக்கள் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.