பேரூராட்சியின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பெரும்பாலானோர் வெளிப்படையாக அறிந்திராத வேளையில் இவரின் வருகைக்கு பிறகு அனைத்து பணிகளும் ஒளிவு மறைவின்றி நடைபெறுவதையும், நகர வளர்ச்சி பணிகளில் பெரும்பாலான நேரங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் ஆர்வமாக செயல்படுவதையும் இவருடைய ஆதரவாளர்கள் பெருமையுடன் கூறி வந்தாலும், இவர் எடுக்கும் அவசர முடிவுகளும், சக கட்சியினர், அதிகார வர்க்கத்தினர், அலுவலகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களை அரவணைத்து செல்லாதாதையும், நகர வளர்ச்சிக்காக அரசு, அலுவலக வட்டத்தில் இலகுவான அணுகுமுறையை கடைபிடித்து திட்ட பணிகளுக்கு வேண்டிய நிதிகளை பெற முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் அடுக்காமலுமில்லை.
இது ஒரு புறமிருக்க...
கடந்த சில வாரங்களாக நகர திமுக சார்பில் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகளில் அதிரை பேரூராட்சி தலைவர் தென்படாதது குறித்தும், திருச்சி மாநாட்டிற்காக அதிரை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சில ஃப்ளக்ஸ் பேனர்களில் நகர தலைவரின் புகைப்படம் இடம்பெறவில்லை என பரவலாக நிலவும் செய்திகளின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக அதிரை பேரூராட்சி தலைவரோடு தொடர்புடைய சிலரிடம் இதுகுறித்து விசாரித்தோம்...
இவை உண்மைதான் என்றும் கடந்த சில வாரங்களாக கட்சியினர் இவரை கண்டுகொள்ள வில்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி சில விளக்கத்தையும் நம்மிடம் கூறுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமதூர் கடைத்தெரு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இவர் மீது போடப்பட்ட வழக்குகள், அதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் ஒருவர் இவர் மீது போட்ட வன்கொடுமை வழக்கு தொடர்பாக பேரூராட்சி தலைவருக்கு ஆதரவாக கட்சியினர் இருக்கவில்லை என்றும், அதேபோல் திருச்சி மாநாட்டிற்காக அதிரை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சில ஃப்ளக்ஸ் பேனர்களில் நகர தலைவரின் புகைப்படம் இடம்பெற வில்லை என்றும் கூறுகின்றனர். கட்சியினர் கோஷ்டிகளாக இருந்து செயல்படுகின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன என்றும் இவற்றை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களை ஊக்குவிப்பதாகவே கருதவேண்டி உள்ளது என்கின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் அதிரை நகரம் திமுகவின் கோட்டையாக தொடர்ந்து இருந்துவருகின்றன. இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் வேளையில் நகரில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவரை தொடர்ந்து புறக்கணிப்பது என்பது கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறுவதாக அமையும் என்பதையும்.சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நகர செயலாளர் இராம. குணசேகரன் அவர்களை கட்சியின் அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கீழ்க்கண்ட கேள்விகளை முன்வைத்து அவரின் விளக்கத்தை பெற்றோம்...
நேர்காணலின் போது மாவட்ட பிரதிநிதி மீராஷா மற்றும் நகர துணைச்செயலாளர் அன்சர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
1. திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு தொடர்பாக அதிரை நகரில் ஆற்றிவரும் பணிகள் குறித்து...
2. அண்மையில் கட்சியின் சார்பில் அண்ணா நினைவு தினம், துண்டு பிரசுரம் விநியோகம் ஆகியவற்றில் அதிரை பேரூராட்சி தலைவர் பங்கேற்காதது குறித்து....
3. திருச்சி மாநாடு தொடர்பாக அதிரை நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள சில ஃப்ளக்ஸ் பேனர்களில் அதிரை பேரூராட்சி தலைவரின் படம் இடம்பெறாதது குறித்து....
நேர்காணால் இதோ...
புறக்கணிக்கப்படுகிறாரா?
ReplyDeleteMr aslam doesn't like Advertisement
ReplyDeleteNt important wall post picture... adirai nt expected politics helps
//கடந்த சில மாதங்களுக்கு முன்பு நமதூர் கடைத்தெரு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இவர் மீது போடப்பட்ட வழக்குகள், அதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் ஒருவர் இவர் மீது போட்ட வன்கொடுமை வழக்கு தொடர்பாக பேரூராட்சி தலைவருக்கு ஆதரவாக கட்சியினர் இருக்கவில்லை //
ReplyDeleteநிச்சயமாக சேர்மன் .அஸ்லம் மீதான மேற்கண்ட குற்றசாட்டுக்கள் அவரின் மீதும் அவரின் அபார செயல் பாடுகளின் மீதும் தி மு க கட்சியினர் உள்பட மற்ற அனைவரும் அவர்மீது கொண்டுள்ள பொறாமையே முதலில் நமதூர் பேரூர் தி மு க வினரில் எத்துணை பேர்கள் மதுரை கோஸ்டி எத்துணை பேர்கள் சென்னை கோஸ்டிகள் என்பதும் இன்னும் வெளிப்படவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் .
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎல்லாம் சரிதான்.
சகோ, சேர்மேன் அஹ்மது அஸ்லம் அவர்கள் ஒரு போதும் புறக்கணிக்கப்படமாட்டார்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
1. கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது என்பார்களே அதுபோல் அதிரை நியூஸ் முயற்சிப்பதில் தவறில்லையே. ஒவ்வொரு ஊடகத்தினரும் அரசியல்வாதிதான், அந்த வகையில் அரசியலுக்குள் அரசியல் என்பது சாதாரனம்.
ReplyDelete2. கட் அவுட் கலாச்சாரம் மறைந்து செலவினங்கள் இல்லாத அரசியலை மக்கள் விரும்பி புதிய மாற்றத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் ப்ளக்ஸ் பேனருக்கு ஆதரவான இந்த தகவலை செய்தியாக்கி வெளியிடுவது இத்தளம் நடத்துபவரின் சமூக அக்கரையின்மையை வெளிப்படுத்துகிறது.
வரும் காலங்களில் கண், மதி மயக்கும் அரசியல் செய்திகளை தவிர்க்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.