.

Pages

Monday, February 17, 2014

பட்டுக்கோட்டை தனியார் கல்லூரி அருகே இளம் பெண் எரித்துக்கொலை !

பட்டுக்கோட்டை அருகே உள்ள கறம்பயம் வீரக்குறிச்சியில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அருகே காட்டாறு ஓடுகிறது. அங்குள்ள சுடுகாடு அருகே வயல் வெளி உள்ளது. இந்த வயல் வெளியில் இன்று 25 முதல் 30 வயது மதிக்கதக்க பெண் பிணமாக கிடந்தார். அவரது உடலின் முகம் முழுவதும் எரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் உடலின் மற்ற பாகங்களிலும் தீக்காயம் இருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வீரக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.

பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செல்லப்பாண்டியன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்களும் சென்றுள்ளனர்.

அவர்கள் பிணத்தை ஆய்வு நடத்துகிறார்கள். கொலை செய்யப்பட்ட பெண் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.

அவரை வேறு இடத்தில் யாராவது எரித்து கொலை செய்து விட்டு பிணத்தை சுடுகாடு அருகே உள்ள வயல் வெளியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி : மாலை மலர்
புகைப்படங்கள் : ராஜா - பட்டுக்கோட்டை



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.