.

Pages

Thursday, February 13, 2014

அதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பரிதாப பலி !


அதிரையை அடுத்த பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி கே. நாடிமுத்து (45). இவர் புதன்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டையில் அதிராம்பட்டினம் சாலையை கடக்க முயன்றபோது அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த வாடகை கார் மோதி இறந்தார். தகவல் அறிந்த பள்ளிகொண்டான் கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் மதுக்கடை உள்ளதால் சாலையில் கூட்டம் அதிகரித்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த மதுக்கடையை வேறு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். விபத்து குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். அங்கேயே நிறுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்

IMAGE  CREDIT : ADIRAI NEWS
NEWS : DINAMANI

1 comment:

  1. எவன் வாழ்தாலும், எவன் செத்தாலும், எனக்கு கவலை இல்லை. தமிழக அரசின் நோக்கமெல்லாம் மற்றவர்கள் சாராயம் குடித்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கம். குடிகாரனுக்கு மாணவி, பிள்ளை, குடும்பம், நம்மை சார்த்து உள்ளவர்கள் யாரையும் பற்றி கவலை இல்லை. இன்று சாராயம் குடித்து, நிதானம் இழந்து, ஒரு உயிர் போய்விட்டது. இனி இந்த குடும்பத்தின் நிலை என்ன? குடிக்கும் பழக்கம் உள்ளவர்களே யோசியுங்கள் உங்களை நம்பி குடும்பம் உள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.