இன்று இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல் இருவரும் கடையை அடைத்துவிட்டு நகைகளை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். சிறிது தூரம் சென்றதும் திடீரென இருசக்கர வாகனத்தின் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இவர்களுடைய வாகனத்தில் மோதியதில் கீழே சாய்ந்தனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்க தொடங்கியதில் ராதாகிருஷ்ணனுக்கு தலையில், கைககளில், முதுகில் பலத்த வெட்டு காயங்களும், சேகருக்கு கையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டது.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராதாகிருஷ்ணன், சேகர் ஆகியோரை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இருவருக்கும் டாக்டர் சீனிவாசன் சிகிச்சையளித்தார். இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை தீவிர சிகிச்சை அளிப்பதற்காக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. த.மு.மு.க மற்றும் நகை கடைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிரை இளைஞர்கள் பலர் உடனிருந்து உதவினார்கள்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் அதிரை போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டனர். நகைகளை போட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக கூடியதால் இந்த பகுதி முழுதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கண்டிக்கவேண்டிய சம்பவம்.
உதவிக்கரம் நீட்டிய சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
கண்டிக்கவேண்டிய சம்பவம்.
ReplyDeleteஉதவிக்கரம் நீட்டிய சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
கயவர்களை மக்கள் முன் காவல்துறை காட்ட வேண்டும்.
ReplyDeleteஅதிராம்பட்டினத்தில் கொலை, கொள்ளை, அதிகரித்துவருகிறது. ஏற்கனவே இதை போன்று நடந்து உள்ளது. நாம் எல்லாரும் அறிவோம். வாகன விபத்து என்றாலும், உயிர்க்கு போராடிக்கொண்டு இருக்கும் நபருக்கு சிக்கிச்சை அளிப்பதாக இருந்தாலும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை என்று செல்லவேண்டிய அவலநிலையாக உள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. 24 மணிநேர சேவைமயமாக இல்லை. போதிய மருந்துகள் இல்லை. இந்த அவலநிலை தொடர்ந்தால் பல உயிர்கள் மரணத்தை சந்திக்க நேரிடும். தயவு செய்து சம்பந்தம்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனையே விரிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteகயவர்களை மக்கள் முன் காவல்துறை காட்ட வேண்டும்.
ReplyDeleteadirai west yaseen
உதவிக்கரம் நீட்டிய சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
ReplyDelete