.

Pages

Friday, February 14, 2014

அதிரை பேரூராட்சித் தலைவரின் இல்லத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி அறிவிப்பு !

அதிரை பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்தை ஒட்டிய ஆயிஷா மகளிர் அரங்கத்தில் மார்க்கப் பிரச்சாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளருமாகிய அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் நிகழ்த்தும் பெண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி புதன் கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.

இந்த பயான்  நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதிரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சகோதரிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

19 comments:

  1. வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.
    முஹம்மது குட்டிக்கும்,லெப்பைமார்களுக்கும் எதிராக சம்மட்டி அடி பிரச்சாரத்தை எதிர்பார்க்களாம்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    பயான்,
    பயான் என்றால் உபதேசம்,
    உபதேசம் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றது. பலர் ஏற்கின்றனர், சிலர் ஒதுங்குகின்றனர்.
    உபதேசம் அன்று பழித்தது,
    அதே உபதேசம் இன்று பழிவாங்குகிறது.
    இது ஏன்?
    குறை யாரிடம்?
    பயான் சொல்வோரிடமா? அல்லது கேட்ப்போரிடமா?

    பயான் சொல்பவர்களே நீங்கள் சிந்தியுங்கள்.
    பயான் கேட்பவர்களே நீனக்ளும் சிந்தியுங்கள்.

    பயன் சொல்வது நன்மைக்கே.
    அதைக்கேட்டு நடப்பதும் நன்மைக்கே.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. Mk avarkal kavanamaka patheyavum aankutde hajraththai elukkenrekal etharkku aslam avarkalum marumaiel pathel solle aakaveandum

    ReplyDelete
  4. ஒரு காலத்தில் பயன் என்றால் அதை நாம் பயபக்த்தியோடு கேட்போம் ஆனால் அதே பயான்கள் இன்று விமர்சிக்க படுகின்றன. இதற்கு காரணம் நாம் அமைப்புகளாலும் மதஹபு களாலும் பிரிந்து கிடக்கின்றோம் மேலும் நிர்பந்தங்களும் உலக பேராசைகளும் நம்மை ஆட்கொண்டு விட்டது ,வட்டி வாங்குவது முதல் மனிதர்களை பிரித்து ஏளனம் செய்வதுவரை இதில் அடங்கும்....அல்லாஹ் போதுமானவன் .

    ReplyDelete
  5. ​ஊருக்கு நடுவே வழிகெட்ட முஃதஜிலாக்களின் வாராந்திர பயான் நிகழ்ச்சி என்பது கடும் கண்டனத்திற்குரியது. ​நமதூர் முஸ்லிம்கள் இதை புறக்கணிக்க வேண்டும்.

    பேரூராட்சி தலைவர் அவர்களின் கொள்கை தடுமாற்றம் இதில் அப்பட்டமாக தெரிகிறது. முதலில் ஹைதர் அலி ஆலிமுடன் கூட்டு, பிறகு வழிகெட்ட பரலேவிகளுக்கு ஆதரவு, இப்போது ஊருக்கு வெளியே இருந்த முஃதஜிலாக்களை நடுத்தெருவில் இழுத்து வந்திருப்பது கூட்டனி அரசியல் மார்க்கத்திலுமா என்று எண்ணத் தோன்றுகிறது.

    சகோதரர்களே, ததஜ என்பது தமிழக முஸ்லிம்களுக்கிடையே உருவாகி வரும் புதிய மதம்; எவ்வாறு காதியானிகள் வட இந்திய முஸ்லிம்களுக்கிடையே உருவாகி வளர்ந்தார்களோ அதைப் போல. நினைவில் வையுங்கள் இவர்களின் மன்னடி அப்டேட் மறு ஆய்வுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் முஷ்ரிக் என்று பிதற்றுகிறார்கள் இந்த வழிகெட்ட முஃதஜிலாக்கள்.

    ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இதில் உடனடியாக தலையிட்டு ‘தங்களின் மன்னடி மறுஆய்வை ஏற்காத முஸ்லிம்களை முஷ்ரிக்’ என்று பிதற்றும் இந்த கூட்டத்தினரின் பயான் நிகழ்ச்சிகளை தடை செய்ய ஆவண செய்ய வேண்டும்.

    வழிகெட்ட பரலேவிசம், சூஃபி கொள்கைகளை காட்டிலும் தீவிர நஞ்சு தான் ததஜவின் கொடிய வழிகேடு என்று புரிந்துகொள்ள அல்லாஹ் நமதூர் மக்களுக்கு தவ்ஃபீக் செய்வானாக.

    அஹ்மத் ஃபிர்தௌச் ஸலஃபி
    ஷார்ஜா, UAE

    ReplyDelete
  6. Nakoor kanthureyai thodarnthu kaatduppalle kanthure yappa aslam sahep kode aatra povagkalama

    ReplyDelete
  7. உண்மையை உணர்ந்த சேர்மன் அஸ்லம்!
    யா அல்லாஹ் சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக...

    நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
    அல் குர்ஆன்-5:2

    ReplyDelete
  8. mkஅபூபக்கர் அவர்களே தாங்கள் கூறியபடி இவர்கள் யாரும் தங்களுக்கோ ,தங்கள் குடும்பத்துக்கோ ஏதாவது தீங்கு விளைவித்தார்கள ? தனி மனிதனை குறிப்பிட்டு ஆதாரம் இல்லாமல் சம்மட்டி, மம்மட்டி ,என்று கமண்ட் செய்யாதீர்கள் " அல்லாஹ்"போதுமானவன்

    ReplyDelete
  9. Firdous,

    இந்த ஆக்கத்தில் நீங்கள் இப்போது சொல்லியுள்ள அதே செய்தியை முன்னர் சொல்லியிருந்தீர்கள் (theadirainews.blogspot.ae/2014/01/tntj.html). அதிலிருந்து நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அப்போது ஓடிய நீங்கள் இப்போது மீண்டும் தலைகாட்டியிருக்கிறீர்கள்.

    எனது பழைய கேள்வி மீண்டும் உங்களின் புதிய ஓட்டம் எப்போது?

    //தப்லீக் ஜமாத்தினரை நாங்கள் காஃபிர்கள் என்று சொல்லவே இல்லை. அவ்வாறு சொன்னதற்கான ஆதாரத்தை கொண்டு வரவும் அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்லவும். //

    தப்லீக் ஜமாஅத்தினரை நரகத்திற்கு சொல்லும் 72 கூட்டத்தில் நீங்கள் சேர்த்துள்ளீர்கள். ஆதாரம் தேவையா?

    //“ததஜ என்பது உருவாகி வரும் புதிய மதம்; காதியானி மதத்தைப் போல”. எனவே இவர்களுக்கு எவ்விதமான உதவிகளையும் செய்ய வேண்டாம். //

    ததஜ புதிய மதம் என்றால் ததஜ நடத்தி வைத்த திருமணத்தில் கையை கண்ணத்தில் வைத்து அமர்ந்து அந்த திருமணத்தை அங்கிரித்தது ஏன்? உங்கள் நண்பர் திருமணத்தை புதிய மதம் என்று உங்களால் கூறப்படும் நபர்கள் செய்யும் போது, அதை தடுக்காதது ஏன்? குறைந்தபட்சம் அந்த திருமணத்தை புறக்கணிக்காதாது ஏன்? ததஜவினர் ஸலாம் சொல்லாம், பிஜே மட்டும் தான் காஃபிர் என்று சொன்னது ஏன்? குடிபோததையில் இப்படி சொல்லுகிறீர்களா? அல்லது காம போதையா?

    //வணக்கத்திற்குரிய இறைவன் இரண்டு என்று இன்னும் சில நாட்களில் இவர்கள் சொல்லக்கூடும். அப்போதும் கூட குர் ஆனிலிருந்தே ‘ஆதாரங்களை’ அடுக்குவார்கள். //

    குர்ஆனில் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை உங்களின் இந்த வாதம் காட்டுகிறது. குர்ஆனின் மீது உங்களுக்கு துளி அளவு நம்பிக்கை இருந்தால் கூட இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட குஃபரான வார்த்தை கப்ர் வணங்கிகள் கூட சொல்ல மாட்டார்கள்.

    //ஏனெனில் இவர்களைப் பொறுத்து குரானின் விளக்கம் காலத்திற்கு காலம் மாறுபடும். //

    அல்பானி மட்டும் புஹாரியில் உள்ள ஹதீசை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுத்தால் அது சரி, ததஜ செய்தால் தவறா? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அல்பானிக்கு எப்படி அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தது?

    //ஏனெனில் இவர்களைப் பொறுத்து குரானின் விளக்கம் காலத்திற்கு காலம் மாறுபடும். உதாரணமாக, 2003 ஆண்டு ஸஹீஹ் ஹதீஸாக இருந்த ‘கண் திருஷ்டி’ 2010ம் ஆண்டு அண்ணனின் தலைமையில் மன்னடியில் நடந்த ஆய்வில் ஷிர்க் ஆனது. அல்லக்கைகள் நடத்திய இந்த ஆய்வை, இந்த 2010ம் வருடத்திய அப்டேட்டை ஏற்ற்க்கொள்ளாதவர்கள் ததஜ மத சட்டப்படி முஷ்ரிக்குகள்.//

    காலத்திற்கு காலம் அதிக விளக்கங்கள் கிடைக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்னால் வரக்கூடியவர்கள் நன்று விளங்கக்கூடும் என்று சொன்னார்களே ஏன்?

    நீ குறிப்பிடும் அல்லாக்கையின் ஆய்வுகளை உலகத்தில் அத்தனை அறிஞர்களும் சேர்ந்தாலும் அது தவறு என்று நிருபிக்க முடியாமல் ஓடி ஒளிவது ஏன்? யஹ்யா சாமியின் சுயஇன்ப கொள்கையை உங்களை போன்ற அல்லாக்கைகள் தான் தூக்கி பிடிக்கின்றனர். அடிக்கடி வந்து இப்படி கேவலப்படாமல் உங்களின் பைத்தியம் தீராது என்று சற்று முன் தான் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  10. நோன்பு வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்தால் நோன்பு முறியாது சொல்லும் அஹ்மத் ஃபிர்தௌச் ஸலஃபி நீங்கள் தொழும் பள்ளியில் மக்கள் மத்தியில் இந்த கருத்தை சொல்ல தயாரா?

    ReplyDelete
  11. ஆரம்பிச்சுட்டானுங்கடா.. வாயத்திரந்தாலே செ இபு போன்று சாக்கடை வார்த்தைகள். வாதத்தை நாகரிகமாக எடுத்து வைக்கவும்.

    ReplyDelete
  12. ஒரே ஒரு கேள்வி... யாரு வேண்டுமானாலும் பதில் சொல்லுங்க... பிறருடைய மேடை ஏறாது ததஜ என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு. அப்படியெனில் சேர்மென் ததஜவில் ஐக்கியமாயிட்டாரா. அல்லது சேர்மெனை ததஜ பித்அத்வாதியோ, மவ்லீதுவாதியோ இல்லை என்று அங்கீகரித்துவிட்டதா?.

    ReplyDelete
  13. //காலத்திற்கு காலம் அதிக விளக்கங்கள் கிடைக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்னால் வரக்கூடியவர்கள் நன்று விளங்கக்கூடும் என்று சொன்னார்களே ஏன்?///
    சகோதரர்களே எப்படி குர்ஆனோடு சஹூஹான ஹதீஸ்கள் மோதும் என்றும் நாளுக்கு நாள் அந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது தான் பின்னால் வந்தவர்கள் நன்கு விளக்கம் பெற்றவையோ. இதே வாதத்தை பரலேவிகளும் வைக்கலாமே.

    ReplyDelete
  14. மவ்லீதுக்கு ஆதரவாக தக்வா பள்ளியில் மைக்கை பிடித்து அரசியல் வாழ்க்கையை துவங்கிய அஸ்லம் காக்கா தற்போது மனம் மாறி அதே மவ்லீதை கடுமையாக விமர்சிக்கும் ததஜ தாயியை வைத்து பயான் செய்வது பாராட்டுக்குரியது.


    அதேநேரம் கந்தூரி விசயத்தில், கந்தூரி ஆதரவாளர்களுக்கு ஆதரவாக அஸ்லம் அவர்கள் குரல் கொடுத்த போது அதே ததஜவின் நண்பரான சகோ, அஸ்லம் அவர்களை எதிர்க்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன். அதற்கு பயான் அரங்கு கைமாறா?

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் பயான் கொட்டகையை அரசியல் ஆதாயத்திற்காக சங்கத் தலைவரை, கட்சித் தலைவர்களை அழைத்து வந்து அரசியல் ஆதாயம் தேடியதையும் மறப்பதற்கில்லை.


    உள்ளூர் திமுக, பேரூ. தலைவரை புறக்கணித்து வருகிற நிலையில், மாநில அளவில் அதிமுகவை ஆதரிக்க இருக்கும் ததஜவிற்கு உதவுவதன் மூலம் இவர் அதிமுகவிற்கு தாவ இருப்பதை சூசகமாக உணர்த்துகிறாரோ? காரணம் பேரூராட்சி தேர்தலில் முதலில் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கத்தையும் சந்தித்து பொன்னாடை போர்த்தி சீட் கேட்டு ஆதரவு தேடியவர்தான் நம்ம தலைவர்.


    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அழைக்கும்
    இப்படியா பேசிக்கிட்டே போனால் எப்படித்தான் ஒற்றுமையா வாழப்போரிங்களலோ தெரியலே அல்லாஹுதான் உங்கள் அனைவருக்கும் கிருபை வழங்குவானாக ஆமீன்
    யார் மார்கபிரசங்கம் செய்தால் என்ன அதில் நன்மை இருக்கும் பட்சத்தில் அதை வரவேன்க்க வேண்டியது தானே அதை விட்டு விட்டு அவன் அப்படி இவன் இப்படி என்று ஏன் நமக்குள்ளே கருத்து மோதல் வேண்டாம் சகோதரர்களே வேண்டாம் இதே அரங்கில் எத்தனையோ மார்க்க பிரசுரங்கமும், மறைந்த கன்னியத்திர்கூரிய எம் எம் எஸ் சாஹிப், கட்சித்தலைவர்கள், மூத்த ஆளிம்கலான கண்ணியதர்கூரிய அப்துல் காதர் ஆலிம், முஹம்மத் குட்டி ஆலிம் போன்ற உலமாக்கள் முன்னிலையில் பெரியவர்களும் ஒன்றுகூடி ஊர் ஒற்றுமைக்காகவும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டது இந்த அரங்கில்தான் கன்னியத்திர்கூரிய ஹைதர் அலீ ஆலிம் அவர்களின் பெண்களுக்கான மார்க்க பிரசங்கம் நடைபெற்றது இந்த அரங்கில்தான் இப்படி எத்தனையோ நன்மையான காரியங்களுக்காக இந்த அரங்கத்தின் உரிமையாளரும் அதிரை சேர்மனுமான சகோதரர் அஸ்லம் அவர்களின் பங்கு இருக்கத்தான் செய்கிறது அல்லாஹு அவர்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் மேலும் மார்கபிரசாரம் செய்யும் அனைத்து நல்லுல்லங்கலான சுன்னத் ஜம்மாத் தாருத் தவ்ஹீத், அதிரை ஸலஃபிக்கல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜம்மாத் போன்ற எந்த நற்இயக்கமாக இருந்தாலும் சரி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களுடைய மார்கப்பிபிரச்சாரமங்களுக்காக யார் இடம் தந்தாலும் தராவிட்டாலும் சரி போற்றுபவரை போற்றிவிட்டு பிறகு தூற்றவேண்டாம் அது அவரவர் விருப்பம் அதற்காக யாரும் சண்டையிட்டுக்கொள்ளாமல் அவர்களின் மார்க்க தெளிவுக்காக துஆ செய்யிங்கள்
    உங்கள் நற்காரியங்களுக்கு யார் தங்களுது உயரிய எண்ணத்தைக்கொண்டு அல்லாஹுக்காக பொருலலிட்தாலும்சரி இடமளித்தாளும்சரி அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தார்கலுக்காகவும் துஆ செய்யிங்கள் அதே ஒருசில கருத்துவேறுபாட்டின் காரணமாக திடிரெனெ தங்களின் மார்கப்பிரசாரத்தை தொடர்ந்து நடத்த இடமளிக்க மறுத்தாலும் பொறுமையுடன் எற்றுக்கொல்லுங்கள் அதன்பிறகு அவர்ககளின் நிரைகுரைகலைப்பற்றி துதிப்பாடுவதை விட்டுவிடுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்

    ReplyDelete
  16. சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன் வைக்காமல்
    சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை பகிர்ந்து
    பெண்கள் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வு தர தக்க
    கருத்துக்களை சகோ பிர்தௌசி முன் வைக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் முன்னேறக் கருத்தை அவர்தான் கூறிவருகிறார்களே. இன்று பெண்கள் அந்தகாலப் பெண்களைவிட எவ்வளவோ முன்னேறி அதிகாரத்தை உரிமையைப் பெற ஆண்களுக்கு சளைக்கவில்லையே. இன்னும் சொர்ப்பகாலத்தில் பெண்கள் வேகமாக முன்னேறிவிடுவார்கள். கவலைபடாதீர்கள்.

      Delete
  17. மனசுகக்கு மிகவும் கஸ்டமாக இருக்குதுங்க இதுபோன்ற குலப்பங்கலை பாக்குரதுக்கு.

    ReplyDelete
  18. அரசியல்வாதியிடம் இதுபோன்ற தன்மைகள் மாற்றங்கள் ஏற்ப்படுவது இயற்கையே. அரசியல்வாதிகளை புகழ்ந்தால் உங்கள் பக்கம். அரசியல்வாதிகளை அவர்களுக்கு ஆதரவாகப்பேசினால் உங்கள் பக்கம். அவர்கள் தேவை எங்கிருக்கிறதோ அங்கு அவர்கள் இருப்பார்கள். மற்றபடி எந்தகொள்கையும் அவர்களகளை கட்டிப்போடாது. சுதந்திரப் பறவைகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.