.

Pages

Thursday, February 6, 2014

காதிர் முகைதீன் கல்லூரியில் மென்திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் சென்னை ஜென் அகடாமியின் [ ZEN ACADEMY ] சார்பில் மென்திறன் வளர்த்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் ஆளுமை மேம்பாட்டுத் திறன், வாழ்க்கையில் வெற்றி பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையேற்க, நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளரும், கணினித்துறை தலைவருமாகிய N. ஜெயவீரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த சென்னை ஜென் அகடாமியின் பேராசிரியர்கள் சுதிர், ஜெயக்குமார், ஹரிஹரன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக இணை பேராசிரியர் A. சேக் அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்த, உதவி பேராசிரியர் A. ஹாஜா அப்துல் காதர் நன்றியுரை வழங்கினார்.

இந்த பயிற்சி முகாமில் 150 க்கும் மேற்பட்ட முதுநிலை கணினி அறிவியல், மற்றும் முதுநிலை கணினி பயன்பாட்டுயியல் மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.






3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. மாணவர்களுக்கு பயனளிக்கும் பயிற்சி. முதுநிலை பயிலும் மாணவர்கள் இப்போதே தன்னை தயார்ப்படுத்திக் கொண்டால் படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் போது சிரமமின்றி முன்னேறிச் செல்ல போதிய பயிற்ச்சிகளும் தேவையானதே.!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.