.

Pages

Saturday, February 8, 2014

புத்தகத் தாத்தாவோடு நெகிழ வைத்த சந்திப்பு !

நாம் கற்கும் கல்விக்கு அடிப்படையாக புத்தகங்கள் - பத்திரிக்கைகள் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு நம் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அன்றாடம் நிகழக்கூடிய உலக விசயங்கள் பலவற்றை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. அறிவுத்திறன் வளர்வதற்கு முதுகெலும்பாகத் திகழுவதோடு மட்டுமல்லாமல் நம்மிடேயே நட்புறவு, சகோதரத்துவம், தன்னம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கின்றன.

நமதூர் தரகர் தெருவை சேர்ந்தவர் M.P. சிக்கந்தர் [ வயது 60 ] தாத்தாவாகிவிட்ட இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை தொழிலை ஆர்வத்துடன் நடத்தி வருகிறார். இவரிடம் தின நாளிதழ்கள், வாரப்பத்திரிக்கைகள், மருத்துவ இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட அனைத்து வித பத்திரிக்கைகளையும் விற்பனை செய்துவருகிகிறார். பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளது இவரின் சிறிய கடை. அதிக நட்பு வட்டத்தை கொண்டுள்ள இந்த தாத்தாவிடம் அதிகமானோர் இதழ்களையும், பத்திரிக்கைகளையும் வாங்கிச் செல்கின்றனர்.

சொற்ப லாபம் தரக்கூடிய இந்த தொழிலை நடத்திவரும் M.P. சிக்கந்தர் அவர்களிடம் பேசிய வகையில்....
இவற்றை தொழில் என்பதை வீட சேவை என்றே குறிப்பிட வேண்டும். காரணம் சிறுவயது முதல் பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட நான் இவற்றை விருப்பத்தின் பேரிலேயே தொடர்ந்து செய்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் நான் நேராக பேருந்தில் வரும் பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு அவற்றை முறையாக அடுக்கி ஒவ்வொன்றாக விற்பனை செய்வோம்.

அதிகாலையில் வாக்கிங் செல்வோரிலிருந்து, பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், பயணிகள், வியாபாரிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைவரும் வாசிக்கின்றனர் என்றும், அதிரையில் பத்திரிக்கைகள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக இருந்தாலும் இவரிடமிருந்து நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்ட தின பத்திரிக்கைகள் விற்பனையாகின்றன. வாசிப்போர் அதிகமாகி வருவது இவருக்கு பெருமையளிப்பதாகவும் நம்மிடம் கூறுகிறார்.

தின பத்திரிக்கைகளில் உள்ளூர் செய்திகள் தாங்கி வரும்போதும், தேர்தல் காலங்களிலும் விற்பனை அதிகமாக் இருப்பதையும், மழை, குளிர் காலங்களில் விற்பனை மந்தமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார். தினமும் ஏற்படும் 1 ரூபாய், 2 ரூபாய் சில்லறை தட்டுப்பாட்டை நம்மிடம் கவலையுடன் குறிப்பிட தவறியதில்லை.

சமூக சிந்தனையை கொண்ட இவர் அன்றாடம் அரசியல் நிலவரங்களை விரல் நுனியிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை துல்லியமாக கணித்து கூறக்கூடியவராகவும் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசிய வகையில் நாம் அறிந்துகொண்டோம்.

கடைசியாக நாம் விடைபெறுவதற்கு முன்பு கேட்க மறந்த கேள்வியை அவரிடம் கேட்டு வைத்தோம்... 'காக்கா உங்களுடைய தின வருமானம் சராசரியாக எம்பூட்டு ? ன்னோம்.. தம்பி 200 ரூபாய்ன்னார். கேட்டதும் அப்புடியே 'ஷாக்'காய்ட்டோம் - அதிர்ச்சியாக இருந்தது.


4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அதிரை நியூஸின் நல்ல முயற்சி, அருமையான பதிவு, இந்த காக்கா அவர்களை என்னால்கூட மறக்கமுடியாது.

    1980களில் தேவி வார இதழை தவறாமல் படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். விற்று போய்விடுமே என்று எனக்காக ஒரு இதழை எடுத்து நான் வரும்வரை தனியாக உள்ளுக்குள் ஒழித்து வைத்துருப்பார்.

    அருமையானவர், பொறுமையானவர், என்னைப் பொருத்தமட்டில் நல்லவரும்கூட.

    அவருடைய இந்த தொழில் சிறக்க வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. அதிரையில் மெயின் ரோடு என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது M.P--கடையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு வியாபாரமும் அவர்களுடைய வாடிக்கையாளர்களும் இருந்தார்கள்..

    இன்னும் சிறப்புடன் தொழில் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உழைப்பு- நேர்மை இவரிடம் உள்ளது - வக்துக்கு தவறாமல் பள்ளிக்கு வருபவர் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தினசரி எனும் தின பத்திரிக்ககை,தராசு எனும் வார பத்திரிகை,பூந்தளிர் எனும் குழந்தை பத்திரிகை ஆகியவைகளுக்கு முகவராய் நானும் சித்தீக்கும் இருந்து [1985]M.P.சிக்கந்தர் அவர்களுக்கு சப்ளை செய்துள்ளோம் என்பதை நினைவு கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.