.

Pages

Monday, February 17, 2014

இராமநாதபுரத்தில் காவல்துறையினரின் தடியடியில் அதிரையர் உள்ளிட்ட பொதுமக்கள் படுகாயம் [ புகைப்படங்கள் ] !

இன்று பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு அதன் அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று நடத்திய யூனிட்டி மார்ச் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அணிவகுப்பு நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் அடையாளம் தெரியாத சில விஷமிகள் கற்களை வீசி பதட்டத்தை ஏற்படுத்தினர். இதைதொடர்ந்து காவல் துறையினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் மீது தடியடி நடத்தி உள்ளனர்.

இதில் அதிரையர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கற்களை வீசியவர்களில் இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கற்களை வீசிய மேலும் சிலர் தப்பித்துள்ளனர்.




2 comments:

  1. எனது வன்மையான் கண்டனம். காவல்துறை காவித்துறையாகி ரொம்ப காலம் ஆச்சு.

    காயமடைந்த சகோதரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

    காவல்துறை உங்கள் நண்பன் என்று நமது ஊடகத்தினர் குழாவ வேண்டாம். காவல்துறையிடமிருந்து செய்திகள் பெற்று பதிய வேண்டிய அவசியம் நமதூருக்கு இல்லை. அதிரை நியூஸ் அதிரை காவல்துறையினரிடம் நெருக்கம் இருப்பது போல் காட்டிக் கொள்வது தெரிகிறது. ஊடக சுதந்திரத்திற்கே உலைவைத்துவிடுவார்கள்.

    ReplyDelete
  2. காயமடைந்த சகோதரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.