.

Pages

Sunday, February 2, 2014

அதிரையில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தும் இரத்ததான முகாம், பேரணி குறித்து நமக்களித்த நேர்காணல் [ காணொளி ]

நேற்று தஞ்சையில் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர் மற்றும் மாணவர் அணியின் பொறுப்பாளர்கள் சேக் அப்துல்லா, அர்சத்கான் ஆகியோர் பங்கேற்று திரும்பியுள்ளனர்.

தஞ்சை ஆலோசனைக்கூட்டத்தில் அதிரையில் எதிர்வரும் [ 23-02-2014 ] அன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியின் அலுவலகம் திறப்பு, அதனை தொடர்ந்து இரத்ததான முகாம், முக்கிய பகுதிகளில் கட்சியின் அறிமுக தெருமுனை பிராச்சாரங்கள், அதிரை பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை அதிரை காவல் நிலையம், அதிரை பேரூராட்சி ஆகியவற்றில் வழங்குதல், செக்கடி மேட்டிலிருந்து முக்கிய பகுதிகளில் பேரணி ஆகியவற்றோடு இறுதியாக ஆலோசனைக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்மிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர்கள் அதிரை உமர் தம்பி மரைக்கா, அலி அக்பர் ஆகியோர் நமக்களித்த நேர்காணல்...

2 comments:

  1. அரசியல் வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை விட்டு விட்டு செயல்பட்டால் நல்லவற்றை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் .....

    ReplyDelete
  2. இது கெஜ்ரிவால் ஈட்ட குல்லா, நேற்று ஒரு கட்சி இன்று ஒரு கட்சி நல்ல வருவிங்க இதெல்லாம் ஒரு பொலப்பா பாஸ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.