![]() |
| ஆம்பூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றிச் செல்லும்போது அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். |
இதையறிந்த அவர்களது உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, விசாரணை என்ற பெயரில் கலவரத்தில் தொடர்பில்லாதவர் களை போலீஸார் கைது செய்வ தாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீஸார் சமாதானப் படுத்தினர். ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 135 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆய்வாளருக்கு சம்மன்
ஆம்பூர் கலவரம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த மார்க்ஸ் தலைமையிலான தேசிய மனித உரிமை கூட்டமைப்பு குழுவினர் நேற்று வேலூர் வந்தனர். இக் குழுவினர் பள்ளிகொண்டா, ஆம்பூர் பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், வேலூரில் செய்தியாளர்களிடம் மார்க்ஸ் பேசும்போது, ‘‘ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் அப்பாவிகள். உண்மையானவர்களை மட்டும் போலீஸார் கைது செய்ய வேண்டும் என எஸ்பி செந்தில்குமாரியிடம் கூறியுள்ளோம். கலவரத்தில் தாக்கப்பட்ட போலீஸார் மற்றும் பொதுமக்களை விரைவில் சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்க உள்ளோம்’’ என்றார்.
மனைவியை ஆஜர்படுத்த கணவர் மனு
இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி அவர் திடீரென காணாமல் போய்விட்டார். எனது மனைவியும் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கக்கூடும். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனைவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி: ஹிந்து தமிழ்

அப்பாவிகளை கைது செய்கிறார்கள் ஆனால் நிரபராதி தண்டிக்கப் பட்டு அதற்க்கு காரணமான பவித்ரா என்ற பெண்ணை இது வரை கைது செய்யவில்லை தேடவும் இல்லை ஆனால் சில அமைப்புகள் குற்றவாளிக்கு துணை போகிறார்கள், சில நாட்களுக்கு முன்பு வட நாட்டில் மனுவாங்க மறுத்த போலீஸ் அதிகாரியை சம்பந்தப்பட்ட மனுதாரர் அடித்து துவசம் பண்ணியது சாதாரண செயலாக எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் விசாரணை என்ற பெயரில் உயிர் வாங்கிய காவல் ஆய்வாளரை தாக்கிய செயல் மதச் சாயம் பூசப்பட்டு கலவரத்தை தூண்டுகிறது இந்து முன்னணி அமைப்பினர். இவர்களை தான் முதலில் கைது செய்ய வேண்டும்.
ReplyDeleteகாவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்படுகிறது அனைத்து காவல் நிலையத்திலும் கண்காணிப்பு காமரா பொருத்தி மேற்பார்வை செய்ய வேண்டும், விதிமுறைகள் தவறும் அதிகாரிகள் மீது தாக்க நடவடிக்கை எடுப்பதோடு போலீஸ் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வளரும். நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு விடுமா?