ரமலான் மாதத்தில் இரவு தொழுகைக்கு பிறகு 10 மணி முதல் 11 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று முதல் நாச்சியார்கோவில் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். முன்னதாக இலங்கை மார்க்க அறிஞர் மவ்லவி அர்ஹம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது ( 02-07-2015 ) எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:



அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அற்ஹம் மௌலவி விஷயத்தில் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். மேலப்பாளையம் பள்ளிவாசலில் காவல் துறையின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம் நடத்தி காவல் துறையை காவித்துறை என்று பெயர் வைத்துவிட்டு அந்த காவித்துறைடமே முறையிடுவது எந்த வகையில் நியாயம். அவர்களுக்கு பாதகம் என்றால் துரோகி, சாதகம் என்றால் நண்பரா? இதன்மூலன் என்ன விளங்குகிறது, ஒரு முஸ்லிமை பழி வாங்க இவர்கள் காவிகளின் உதவியை கூட கோருபவர்கள்.
இரண்டாவதாக, இந்த அற்ஹம் மௌலவி இலங்கையிலிருந்து விசிட் விசாவில் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்துகிறார் அதனால் அவர் இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளார் என்று புகார் அளித்துள்ளனர். அப்படியானால் த.த.ஜ வினரின் தாயிகள் என்று சொல்லப்படுபவர்கள் வளைகுடா நாடுகளுக்கு மார்க்க சொர்பொழிவாற்றுவதற்கு எந்த விசாவில் செல்கிறார்கள் என்பது ஐய்யப்பாடு.
மூன்றாவதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று புகார் அளித்தவர்கள் ஆங்காங்கு தெரு முனை பிரச்சாரம் செய்யும்பொழுது அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு தொந்தரவை கொடுத்ததினால் ஒரு தெரு ஜமாஅத்தே அவர்களை அந்த தெருவிற்குள் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்ததை அனைவரும் அறிவீர்கள். அதேவேளை அந்த தெரு ஜமாஅத்தினர் இவர்களை போல (த.த.ஜ வினரால் சொல்லப்படும் காவித்த்துறையிடம்) காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை.
இதை த.த.ஜ வில் உள்ள பல நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டு நண்பர் அப்பாஸ் அலி போன்றோரை போல சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்பது பல நல்லுள்ளங்களின் ஆவலாக உள்ளது.
உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!
Delete