நிகழ்ச்சிக்கு லயன்ஸ் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். அஹமது தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க உடனடி முன்னாள் ஆளுநர் எம் பிரேம்,
எம். முஹம்மது ரஃபி, பி.வெங்கட்ராமன், வீரபாண்டியன், ஜனார்த்தனன், அண்ணாமலை, வேதமூர்த்தி, அடைக்கலச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எஸ். வேதநாயகம் இஃப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் மாநாட்டில் வழங்கிய சிறப்பு பதக்கத்தை இப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். அஹமது அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர் மன்றத்தலைவர் ஆர். ஜவகர்பாபு, புனவாசல் சர்ச் பாதிரியார் அருளானந்த், அரசியல் பிரமுகர் சின்னச்சாமி, ஒரத்தநாடு டிஎஸ்பி எஸ். செங்கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு இஃப்தார் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். 'நோன்பின் மாண்பு' குறித்து காதிர் முகைதீன் கல்லூரி அரபி பேராசிரியர் இத்ரீஸ் சிறப்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து பேராசிரியர் பர்கத் அவர்களின் சிறப்பு துஆவுடன் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் முனைவர் மேஜர் கணபதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊர் பிரமுகர்கள், அனைத்து மத பிரமுகர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்கள் எஸ்எம் அக்பர் ஹாஜியார், பேராசிரியர் எம் ஏ முஹம்மது அப்துல் காதர், எஸ்.எம் முஹம்மது மொய்தீன், அப்துல் ஹமீது, எம். நெய்னா முஹம்மது, என்யூ. ராமமூர்த்தி, செல்வராஜ், சார்லஸ், டிபிகே ராஜேந்திரன், எம். சாகுல் ஹமீது. எம் ஆறுமுகச்சாமி, எம். முஜிபுர் ரஹ்மான், எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், வி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.


















Masha Allah.... & May Allah blessing his mercy on you & our brothers....
ReplyDelete