ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்றாக இருந்தது. சார்பதிவாளர் அலுவலக கட்டிட பணிக்காக நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்கள் தனக்கு சொந்தமான [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
இந்த கட்டுமானப் பணிக்காக அரசு ரூபாய் 55 லட்சம் ஒதுக்கியது. இதையடுத்து கட்டிடம் கட்டுவதற்குரிய கட்டுமான பணி கடந்த 12-02-2014 அன்று முதல் துவங்கி தொடருந்து நடைபெற்று வந்தன. கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் இன்று காலை இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், மாவட்ட பதிவாளர் வடிவழகி, அதிரை சார்பதிவாளர், வருவாய் அலுவலர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள், அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, நகர கூட்டுறவு வங்கிதலைவர் ராமராஜ், துணை தலைவர் எம்.ஏ முஹம்மது தமீம், தக்வா பள்ளி டிரஸ்டி எம்பி அபூபக்கர், தமுமுல் அன்சாரி, ஹாஜா பகுருதீன், கவுன்சிலர்கள் சிவக்குமார், அப்துல் லத்திப், அபூ தாஹிர், சேனா மூனா ஹாஜா முகைதீன் மற்றும் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சார்பதிவாளர் அலுவலகத்திற்காக தனது நிலத்தினை தானாமாக வழங்கிய நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறேன். மேலும் உங்களுக்கு இறைவன் அருட்கொடைகளை பொழிவானாக !!!
ReplyDeleteஇதேபோல்,நமதூரில் இருக்கும் பல நிலக்கிழார்கள்,கொடைவள்ளல்கள்,செல்வந்தர்கள் அரசுக்கு பல நிலங்களைகளையும் கொடைகளையும் அள்ளி கொடுத்து நமக்கே எதிர்வினையாக செயல்பட்டுகொண்டு இருப்பதை காண முடிகிறது.
//பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும்//
இதுலாம் இந்த அலுவலத்தில் நடக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறதா ? முறைகேடுகள் இல்லையென்றால் தாலுக்கா,வருவாய்துறை,சார்பதிவாளர் அப்ப எதற்கு தொழிலுக்கு மாறாக லஞ்சம்,திருட்டுதனம்,திருட்டுபட்டா முதல் சிட்ட வரை எடுத்து கொடுப்பதற்கு அதிரையில் நடமாடும் சில ஜால்ராக்கள் நல்லவர்களாகவும் நடித்து கொண்டும் தானே இருக்கின்றாக்ர்கள்.
தம்பி சத்தியமா நம்ம புறோக்கர் யாரும் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள்
Deleteதம்பி சத்தியமா நம்ம புறோக்கர் யாரும் அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள்
Delete