.

Pages

Thursday, July 30, 2015

மரியாதை செலுத்த வந்தவர்களுக்கு உதவிய அதிரையர்கள் !

மாரடைப்பால் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

மரியாதை செலுத்துவதற்காக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். 

'மாமேதை' அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸாவில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து புறப்பட்டு சென்ற காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் செய்யது அஹமது கபீர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், முஹம்மது மற்றும் நிஜாம் ஆகியோர் இந்தியா முழுவதும் வந்திருந்த பொதுமக்களுக்கு தானாக முன்வந்து உதவினார்கள். குறிப்பாக கூட்டத்தில் ஏற்படும் தள்ளு முள்ளுவை தவிர்க்க உதவினர். ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களுக்கு மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தின் முகவரியை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் ஜனாஸா தொழுகையின் போது ஏற்படும் தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தினர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த பணிகளை மேற்கொண்டனர்.
 
 
  

2 comments:

  1. அன்பிற்கினிய அதிரை சமூக ஆர்வலர்களே,

    ஒரு மனிதர் இருந்து விட்டால் அவருக்கான ஜனாசா தொழுகையில் ஈடுபடுவதும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதும் ஒரு இஸ்லாமியனின் கடமை .

    இதுபோன்ற சூழலில் புகைப்படங்கள் எடுத்தல் மற்றும் விளம்பரங்களை தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  2. அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று பொறமை படாத விஷயம் ... மரணம் மட்டுமே .... ஆனால் அதையும் பொறாமை பட வைத்துவிட்டார் அப்துல் கலாம் அவர்கள் .... இறந்தால் அவரைப் போல் இறக்க வேண்டுமென்று .......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.