அந்த வீடியோவில் TN25 AJ 8209 என்ற வாகன எண் பதிவாகி இருக்கிறது. இது திருவண்ணாமலை பதிவு எண். மனித தன்மையற்ற இந்த செயல் பார்ப்போரை பதறவைத்தது. இந்த வண்டி திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மனித தன்மையற்ற செயல் என கண்டித்து உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தைக்கு மது கொடுத்தது தாய் மாமன் ஏழுமலை என்று தெரியவந்தது. இதையடுத்து, ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை திருவண்ணாமலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு மது அருந்த கொடுக்கும் செயலில் ஈடுபட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:விகடன்

தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மதுபானக் கடைகளை திறந்து பால் மனசு பிஞ்சுகளையும் விட்டு வைக்க வில்லை. வென்புரட்சி, பசுமை புரட்சி போய் வறுமை புரட்சி தான் தமிழகத்தில் வரும் காரணம் தமிழன் தண்ணியில் மிதக்கிறான். மதுவை ஒழிப்போம் என்று எந்தக் கட்சியாவது தேர்தல் அறிக்கையில் சொல்லுதா? இங்கே சொந்த தாய்மாமன் குழந்தைக்கு மது கொடுக்கிறான் அம்மாவோ கடையை திறந்து குடி மகனே ! குடி மகனே என்று சொல்லி ஊரெல்லாம் கடை. மக்கள் போராட வேண்டும் இதனை ஒழிக்க!
ReplyDelete