நாம் செய்த அமல்களை சுமந்து சென்றது ரமழானே!
இனி வரும் வருடம் நீ வரும் வேளையில் நாங்கள் உன்னை மறுபடியும் அடைவோமா என்பதறியாதே!
ஈகையான உள்ளமும் இறையச்ச நெஞ்சமும் இன்புற்று களைத்து
இளைப்பாறிக்கொண்டது!
எல்லா வளமும் தரும் ஈதுப்பெருநாளில் – குறை இல்லா மனத்தோடு கூடி மகிழ்வோம்!
சொல்லால் செயலால் குறையேதும் புரியாமல் கொண்டாடி மகிழ்வோம் இன்பத்திருநாளை!
ஈதுல் ஃபித்ருப் பெருநாளை!
உன்னை வரவேற்று காத்திருந்து! புத்தாடை தாம்மனிந்து!
மனதார உண்டுக்கழித்து!
உளமார உறவினரினங்களில் உரையாடி!
இன்பங்களை சுமந்து எங்களை வந்தடையும் ஈதுல்-ஃபித்ரே!
பிறை பார்த்து பாவம் போக்கிட
எங்களை வந்தடைந்த ரமழானே!
அதெ பிறை பார்த்து இன்பம் பெற்றிட எங்களை வந்தடைந்த ஈத் பெருநாளே!
வாழ்த்துக்களுடன்
- Irfan Cmp
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteEID MUBARAK.
நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
2015-1436
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.