.

Pages

Monday, July 20, 2015

எம்.எல்.ஏ.வை கயிற்றால் கட்டி வைத்து நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு !

உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர் மின் வெட்டால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ.வையும், கவுன்சிலரையும் பிடித்து கயிற்றில் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்திரபிரதேச மாநிலத்தின் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின்வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் அவதியடைந்து வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததையடுத்து அப்பகுதிக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ பப்பான் சிங் சவுகானையும் கவுன்சிலர் கயாமுதினையும் சிறைபிடித்தனர். பலமணி நேரம் அவர்களை கயிற்றில் கட்டிவைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் முனிராஜ், எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை விடுதலை செய்வது தொடர்பாக கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

விரைவில் அனைத்து பணிகளையும் முடித்து தருவதாக எம்.எல்.ஏ மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கொடுத்த வாக்குறுதியை இருவரையும் விடுவித்தனர்.

எம்.எல்.ஏ கிராம மக்கள் மீது எந்தவித புகாரும் அளிக்காததால் போலீஸார் யாரும் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

நன்றி: தினமணி

1 comment:

  1. உ.பி.,யில், தம் பகுதியில் மின்சாரம், குடிநீர் முறையாக சப்ளை செய்யப்படாததை கண்டித்து, எம்.எல்.ஏ.,வை கிராம மக்கள் சிறைபிடித்து விட்டார்கள் ஆனால் வேலை செய்யாத அதிகாரிகளுக்கு யாரு தண்டனை கொடுப்பது? அதிகாரிகளையும் சேர்த்து உதைக்க வேண்டும் அடிப்படை வசதி செய்யக்கூட நேரம் இல்லை என்றால் என்ன செய்யமுடியும்? இது வடநாடு பக்கம்

    இங்கே; தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி யாராவது பேசினால், நாக்கை வெட்டுவேன்,” என, பொதுக் கூட்டத்தில், எம்.பி., சுந்தரம் ஆவேசமாக பேசினார். நாகரிகமாக இதுவரை யாரும் கண்டனம் தெருவிக்க வில்லை. அரசாங்கத்தின் டாஸ்மாக் சரக்கு எம்.பியை எப்படி பேச வைத்திருக்கின்றது என்று பாருங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.