அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு பகுதி சிஎம்பி லேன், புதுமனைத்தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சீராக கொண்டு செல்ல பேரூராட்சி பொது நிதி ₹ 10 லட்சம் மதிப்பில், 300 மீட்டர் நீளத்தில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. கட்டுமான ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வந்தனர். பெரும்பாலான பணிகள் நிறைவுற்ற நிலையில் அப்பகுதியில் கழிவு மணல் அப்புறப்படுத்தாமல் குமிந்து கிடந்தது. இது தொடர்பாக இந்த பகுதி பொதுமக்களும், அதிரை எஸ்டிபிஐ கட்சியினரும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சாலையில் குமிந்து காணப்படும் கழிவு மணலை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் அள்ளிச்செல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் அப்புறப்படுத்தும் பணி நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இன்று காலை முதல் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சாலையில் குமிந்து காணப்படும் கழிவு மணலை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிராக்டர் வாகனங்கள் மூலம் மணல் அள்ளிச்செல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் அப்புறப்படுத்தும் பணி நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.