இந்நிலையில் அதிரை மற்றும் இதன் அருகில் உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த சுமார் 1000 இணைப்புதாரர்களை முன்னறிவிப்பின்றி திடீரென அதிரையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் புதிதாக துவங்கியிருக்கும் மனம் போல் காஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ள தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், பிலால் நகர், எம்எஸ்எம் நகர் ( ஆதம் நகர் ), மேலத்தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, சேது ரோடு, முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இணைப்புதாரர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா பகுதியினர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டு அதன் படி, அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் தலைமையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் சங்கத்தலைவரை இன்று நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். இதில் சம்பந்தபட்ட அலுவலர்களின் கவனத்திற்கு உடனடியாக எடுத்து சென்று முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டுள்ள கேஸ் இணைப்புகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்த கேட்டுக்கொண்டனர்.


கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் ஏனோ தானோ என இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டியது நமது கடமை.
ReplyDeleteசம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட மக்கள் இதனை முன்னெடுத்து கோரிக்கை வைத்ததுபோல பிற முஹல்லா வாசிகளும் அவரவர் சங்கங்களுக்கு கோரிக்கை வைக்க முன்வர வேண்டும்.
தாமதித்தால் 1000 இணைப்புகளுக்கு உள்ள நிலை 10,000 இணைப்புகளுக்கு வரலாம்.
கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் ஏனோ தானோ என இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டியது நமது கடமை.
ReplyDeleteதாமதித்தால் 1000 இணைப்புகளுக்கு உள்ள நிலை 10,000 இணைப்புகளுக்கு வரலாம். அதிரயில் உள்ள அனைத்து இயக்கங்களும் இப்பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்து போரட முன்வரவேன்டும்