இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக பள்ளிக்கு வந்து நோன்பு கஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் குழுவினர் நியமித்து தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ் தொழுகையும், ஹிஸ்பு, வித்துரு தொழுகை, அதிரையில் தங்கிருக்கும் வெளியூர் சகோதரர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சஹர் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர்.
சஹர் உணவு குறித்து காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவரும், அதிரை நியூஸ் வாசகருமாகிய கடையநல்லூர் ஜாபர் ஹஃபிஸ் முகநூலில் கருத்து தெரிவித்திருப்பதாவது...
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் வந்தாலே தக்வா பள்ளி தான் ஞாபகம் வருகிறது. அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் ஐந்தாண்டுகள் ( 2005 - 10) தொடர்ச்சியாக இளங்கலை , முதுகலை படித்த காலங்களில் நோன்பு வந்தால் சகர் நேர உணவுக்காக விடுதியில் தங்கிப்படிக்கும் அத்தனை மாணவர்களும் தக்வா பள்ளியை நோக்கி விரைந்த நேரம் இன்னும் நெஞ்சோரம் நிழலாடுகிறது. அதிலும் கடையநல்லூர் மாணவர்களில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் தக்வா பள்ளியில் சகர் உணவு கொண்ட ஒரே மாணவன் அனேகமாக நானாகத்தான் இருப்பேன். படிப்பு முடிந்து இத்துடன் ஆறு ரமலான்களை கடந்து வந்துவிட்டேன்.
ஐந்தாண்டுகள் எமக்கு உதவிய நல்லுள்ளகளுக்கு உண்மையிலேயே நன்றி கூற கடமைபட்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ்... பொருளாதார பின்புலத்துடன் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தக்வா பள்ளிக்காக கண்டிப்பாக ஏதேனும் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அதற்கு சாதகமான சூழல் வரவில்லை என்றாலும் அதற்கான காலச்சூழலை எதிர்காலத்தில் எதிர்பார்த்தவனாக.
தக்வா பள்ளி இஃப்தார் கமிட்டி பொறுப்பாளர் 'மணிச்சுடர்' நிருபர் சாகுல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
'கடந்த பல வருடங்களாக தக்வா பள்ளியின் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதன் முதலாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களின் தீவிர முயற்சியிலும், மேலும் சிலரின் ஒத்துழைப்போடு சஹர் உணவு ஏற்பாடு தக்வா பள்ளியில் கொண்டு வரப்பட்டது. அதிரையில் தங்கி இருக்கும் வெளியூர் சகோதரர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கிறது. இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கும் பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர். பல்வேறு தரப்பின் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த சஹர் உணவு ஏற்பாடு வருடம்தோறும் தொடர்ந்து நடைபெறும். இன்ஷா அல்லாஹ். சஹர் உணவு ஏற்பாடு செய்து அனைவருக்கும் தக்வா பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பில் நன்றி' என்றார்.
முதல் படத்தில் தக்வா பள்ளி இஃப்தார் கமிட்டி பொறுப்பாளர் ஜாகிர் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நோன்பு கஞ்சியை நோன்பாளிகளுக்கு ஆர்வத்துடன் விநியோகம் செய்து வருகிறார்.


Nalla pathevu
ReplyDeletejajakallahair