வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கு கொள்ளும் விதமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை சார்பில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் தன்னார்வலர்களிடமிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதிரையின் வர்த்தகர்களும், ஊர் பிரமுகர்களும் ஆர்வத்துடன் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
நேற்று முதல் தன்னார்வலர்களிடமிருந்து திரட்டி வரும் பிஸ்கட், தண்ணீர் பாட்டல், போர்வை, பால் பவுடர் உள்ளிட்ட வெள்ள நிவாரண பொருட்கள், அதிரை செக்கடி மேடு பகுதியில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை வாகனம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது மற்றும் குழுவினர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.
வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க இருக்கும் தன்னார்வலர்கள் மரைக்கா இத்ரீஸ் அஹமது அவர்களை 0091 9944499366 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.