அதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ஓட்டப்போட்டி: மீண்டும் நடத்துவார்களா? ஆர்வலர்கள் கேள்வி !
அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] சார்பில் உடல் ஆரோக்கியம் - உலக அமைதி ஆகியவற்றை வலியுறுத்தி அதிரையில் சில ஆண்டுகளாக நெடுந்தூர ஓட்டப்போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த போட்டியில் விளையாட்டு வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். அதிரை சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் வரவேற்பை பெற்ற இந்த போட்டியை அதன் நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தும் முயற்சியில் ஈடபடாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிரை ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக கூறுகையில், 'உடல் ஆரோக்கியம், வாகன விபத்து தடுப்பு, பசுமை-தூய்மை, இரத்த தானம் ஆகியவற்றில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிடப்பில் போட்டுள்ள மராத்தான் நெடுந்தூர ஓட்டப்போட்டியை மீண்டும் அதிரையில் நடத்துவார்களா ?' என கேட்டுள்ளனர். அதிரை ஆர்வலர்கள் நியாமாக எழுப்பிய கேள்வி ASC நிர்வாகிகளின் காதில் விழுமா ? என பார்ப்போம் :)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Enru kalai. Naan vaakkeg. Pokumpothu. Unmaiyakavea
ReplyDeletenenaiththean
maraththan aannsa aachchu. Au
Insaallah we will try
ReplyDelete