.

Pages

Sunday, December 27, 2015

துபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - சிறுமி சாதனை !

துபாயில் கடந்த 18.12.2015 அன்று இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 39 ஆண்டு நிறைவு விழா துபாய் கல்ப் மாடல் ஸ்கூல் அரங்கில் நடை பெற்றது

இதில் அமீரக அளவிலான கிராத் போட்டி நடை பெற்றது 60 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர். இப்போட்டியில் மேலத்தெரு அதிரை அப்துல் ஹாதி அவர்களின் குழந்தை சுமையா அப்துல் ஹாதி பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் .

ஆண்களுக்கான போட்டியில் பார்வையாளர் வரிசையில் தாயின் மடியில் அமர்ந்து கிராத்தை கேட்டுக்கொண்டிருந்த முஹம்மது ஈஸா அப்துல் ஹாதி மேடைக்கு தன் சகோதரியுடன் சென்று கிராத் ஓதி முதல் பரிசை தட்டி சென்றார். அப்துல் ஹாதியின் மற்றொரு குழந்தை ஆயிஷா அப்துல் ஹாதி ஆறுதல் பரிசை வென்றார். பரிசுகளை தட்டிச்சென்ற உடன் பிறந்த சிறுவன் சிறுமிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அபுதாபி, சார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட பல்வேறு அமீரகப் பகுதியிலிருந்து 500 க்கும் மேற்பட்டோர் வந்து கலந்துகொண்டனர்.
 

3 comments:

  1. மாஷாஅல்லாஹ்..! தம்பி அப்துல் ஹாதிக்கும் அவரது குழந்தைகளுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களும் துஆவும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.