இந்நிலையில் அதிரை பேரூராட்சி சார்பில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள மோட்டார் பம்பிங் அறையை சுற்றி புதிதாக எழுப்பட்ட சுவர் மற்றும் பிற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு காவி மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது பொதுமக்களிடேயே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மேலத்தெரு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் சுகாதார கழிவறையின் சுவர், கடற்கரைத்தெரு தர்ஹா அருகே புதிதாக எழுப்பட்டுள்ள சுகாதார கழிவறை, வண்டிப்பேட்டை மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள சமுதாய அடக்கஸ்தலம்-சுடுகாடு தடுப்பு சுவர் ஆகியவற்றில் புதிதாக காவி மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது வழக்கத்திற்கு மாறான செயல் எனவும், திடீரென நிறத்தை மாற்றி இருக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் செயலைக் கண்டு வியப்படைவதாகவும் தெரிவித்தனர்.


காவியமா?காவிமயமா?
ReplyDelete