பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 20 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 13 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. போட்டியில் இருந்து விலகிக் கொள்பவர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (திங்கட்கிழமை) அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இன்று பகல் 11 மணிக்கு மனுக்கள் வாபஸ் தொடங்கியது. இதில் நாம் தமிழர் கட்சி கருணாநிதி ( மாற்று ), எஸ்.டி.பி.ஐ கட்சி ஜ. ஹாஜி சேக் ( மாற்று ) சுயேட்சை செ. லெட்சுமி ஆகியோர் வாபஸ் பெற்றனர். இதையடுத்து பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் இன்று வெளியிடப்பட்டன.
பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் இறுதி பட்டியல்:
பெயர்: கட்சி சின்னம்
1) சி.வி. சேகர் -அதிமுக- இரட்டை இலை
2) என். செந்தில்குமார் -தேமுதிக- முரசு
3) கே. மகேந்திரன் -காங்கிரஸ்- கை
4) எம். முருகானந்தம் -பாஜக- தாமரை
5) சி. லெட்சுமி -பாமக- மாம்பழம்
6) கே. கீதா -நாம் தமிழர்- மெழுகுவர்த்திகள்
7) சி. குபேந்திரன் -சிவசேனா- வில் அம்பு
8) இசட். முகமது இலியாஸ் -எஸ்டிபிஐ- எரிவாயு உருளை
9) ஜெ. விவேகானந்தன் -தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்- பானை
10) கே. சஞ்சய்காந்தி -சுயேச்சை- மோதிரம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.